SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஏப்ரல், 2015

சி. பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களில் முக்கிய இடங்களில் சி. சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான சூழ்நிலை

அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உரிமை உள்ளது. அவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண், பெண் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஈவ்டீசிங், பாலியல் கொடுமை ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இந்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக்கூட நிர்வாகிகளும், அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கூட ஊழியர்களும் அறியவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் உருவாக்கவேண்டும்.

வளர் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கவேண்டும்.

மாணவிகளுக்கு கராத்தே

மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும். மேலும் ஆண்-பெண் சமம் என்பது குறித்த கண்காட்சி, வினா-விடை போட்டியை பள்ளிகளில் நடத்தவேண்டும். விடுதிகளில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய சவால்களை சந்திக்கும் திறனை உருவாக்கவேண்டும்.

மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்டவாறு பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டியில் பள்ளியின் முதல்வர் அல்லது துணை முதல்வர், ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர், ஒரு மாணவி, ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர் ஆகியோர் இடம் பெறவேண்டும். அந்த கமிட்டியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புகார் பெட்டி- சி.சி.டி.வி. கேமரா

மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புகார் செய்ய, புகார் பெட்டி இருக்கவேண்டும். அந்த பெட்டியில் பாலியல் கொடுமை பற்றி மாணவ-மாணவிகள் ஏதாவது எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட வளாகங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்கவேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பது, மன அழுத்ததில் இருந்தால் அவர்களுக்கு முறையான உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வகுப்பறைகளிலும், விடுதிகளிலும், விளையாடும் இடங்களிலும் இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கானஹெல்ப் லைன்

குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் போன் நம்பர் நோட்டீசு போர்டு உள்பட முக்கிய இடங்களில் எழுதி போடவேண்டும். குறிப்பாக 1098 என்ற நம்பர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தெரியவேண்டும். பள்ளிக்கூட நிர்வாகம், ஊழியர்கள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 31 மார்ச், 2015

விரைவில் அனைத்து அரசு பள்ளிகளும் இந்த நிலை அடைய வாழ்த்துக்கள்! !! முன்னோடியாய் இருக்கும் மலையம்பாளையம் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி!

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர் !

ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 29 மார்ச், 2015

தூங்குகிறதா தொடக்ககல்வி துறை ; துவக்க பள்ளிகளுக்கு  ஆண்டு விழா நடத்த நிதி இல்லை

அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ்,

அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த, இக்கல்வியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்து, விழா நடக்கிறது.

இதற்காக நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.2,350, உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.2,450 வழங்கியுள்ளது. இந்நிதியில் ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதேசமயம் துவக்கப்பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறு குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்து விட்டு, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியது பாரபட்சமே. வரும் காலங்களிலாவது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும், என்றார்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

புதன், 25 மார்ச், 2015

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை:

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏபிஎல் என்ற செயல்முறை அடிப்படை கற்றல் முறை உள்ளது. பாடம் தொடர்பான அட்டைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும். அத்துடன்

புத்தகங்களையும் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இரண்டு முறைகளை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை திணித்துள்ளது. இதனால், மாணவர்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். ஆசிரியர்கள் என்னதான் விரிவாகவும் புரியும்படியும் பாடங்களை நடத்தினாலும், இந்த இரட்டை முறைகாரணமாக மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்