COURT NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COURT NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.

திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம. மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000!!!.

-அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
பள்ளிக் கல்வி ( இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .
படிக்க :
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24 . 3 . 2005 அன்று மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிக்கை .
ஆணை :
ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே £, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையி ல், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெளிணிதிடும்
வகையில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்ப டி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும்
ரூ . 50 ,000/- நிதி வழங்கப்படும். இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ,மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.
2. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிவுரைகள் தனியாக வெளியிடப்படும்.
3. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/
திஷி / றி /2005
நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு.ஞானதேசிகன்,
அரசு செயலாளர்.
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 6
தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை 6
மெட்ரிக்குலேக்ஷன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 6
மாநில கணக்காயர், சென்னை 18
மாநில கணக்காயர், சென்னை 35
கருவூல கணக்கு ஆணையர், சென்னை 15
நகல்
மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம், சென்னை 9
மாண்புமிகு கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை 9./ஆணைப்படி அனுப்பப்படுகிறது
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்


தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.

2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது.

ஆசிரியர் பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு இறுதி தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உளவியல், சமூகவியல், சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 25-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களில், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பிஎச்டி பட்டதாரிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

எனவே, ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய புதிய தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்படுமா? அல்லது முதலில் பணிக்கு அனுமதித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் அளிக்கப்படுமா? என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

சனி, 4 ஏப்ரல், 2015

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வில் 2வது முறையாக பெயில் ஆன 3000 பேர்: பணி நீக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!!


பீகார் மாநிலம் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்பதை நிரூபிக்கும் வகையில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பிட் எடுத்துக்கொண்டு வந்து தந்ததை பார்த்தோம். தற்போது அம்மாநிலத்தில் ஆசிரியர்களின் அறிவுத்தகுதியும் வெளியாகியுள்ளது. 

அம்மாநிலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் 2வது முறையாக ஏறத்தாழ 3000 ஆசிரியர்கள் கோட்டை விட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள்பதவி நீக்கம் செய்யப்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐகோர்ட்டுஉத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. 

தேர்வு எழுதிய ஆசிரியர்களில் ஒருவரான ரிஸ்வானா கட்டூன் என்பவர், இரு முறை பெயிலானதால் தன்னை பணி நீக்கம் செய்யக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீது வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே தேர்வில் தோல்வியடைந்த அனைவரும் அடுத்த வாரத்தில் பணி நீககம் செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் கணினி ஆசிரியர் நியமிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்றம்
தடை விதித்துள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் மகன் டான்போஸ்கோ உள்பட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கம்ப்யூட்டர் ஆசிரியராக படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். தற்போது, தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் எடுக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு தேர்வு செய்து வருகிறது. இதற்கான கவுன்சலிங் வரும் 4ம் தேதி (நாளை) நடக்கிறது.
சீனியாரிட்டி பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் விதவைகளுக்கும், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் மட்டும் முன்னுரிமை கொடுத்துள்ளது. இது தவறானது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று அரசு உத்தரவில் தெளிவாக கூறியும் இதை பின்பற்றவில்லை. இதனால் நாங் கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார்.

மனுதாரர் சார்பாக வக்கீல் தாட்சண்யா ரெட்டி ஆஜராகி, மனுதாரர்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அதுவரை கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, ஆசிரியருக்கான கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் முன்னுரிமை பிரிவில் தேர்வு செய்தவர்களுக்கு பணி வழங்க தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது குழப்பம் ஏற்படுவதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவ

சென்னை ஐகோர்ட்டில், என்.சாந்தி, எம்.எஸ்.கே.மணிபாரதி ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ‘மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த பதவிக்கு நாங்கள் விண்ணப்பித்தோம். எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, கடந்த மார்ச் 5-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது, அறிவிப்பு வெளியான 2012-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அன்று எங்களது மோட்டார் வாகனம் ஓட்டுனர் உரிமத்தை நாங்கள் புதுப்பிக்கவில்லை என்றும், அதன்பின்னர்தான் உரிமத்தை புதுப்பித்துள்ளதால், நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ‘அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது, குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் தகுதிகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் ஓட்டுனர் உரிமங்களை வைத்திருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அவர்கள் அதை புதுப்பிக்கவில்லை. இதைஒரு குறையாக கூறமுடியாது. மனுதாரர்களுக்கு எதிராக டி.என்.பி.எஸ்.சி. செயலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

புதன், 1 ஏப்ரல், 2015

Flash News: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,  ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சமூக நலத்துறை கடந்த 1981–ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசாணைக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  ‘’இந்த வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘1 முதல் 5–ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து முக பாவனையுடன் பாடம் நடத்த வேண்டும். மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை அழைத்துச்செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய முடியும் என்பதால், பார்வையற்றோர், காது கேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த பதில் மனுவை கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் ‘பார்வையற்றோர் சராசரி மனிதரே கிடையாது என்று அரசு தரப்பு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இப்படியோரு பதில் மனுவை தாக்கல் செய்த பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த பிரச்சனையை இப்படியே எங்களால் விட்டு விட முடியாது. இடஒதுக்கீட்டின் கீழ் பார்வையற்றோருக்கு வழங்க வேண்டிய பணியிடங்கள் எத்தனை? அதில் எத்தனை இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளது? எத்தனை இடங்கள் காலியாக உள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி வருகிற ஏப்ரல் 1–ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்’ என்று கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா நேரில் ஆஜராகி, ‘மாற்றுத்திறனாளிகள் குறித்து பதில் மனுவில் குறிப்பிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பதில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர், அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி எழுந்து, ‘பதில் மனுவில் தவறுதலாக அந்த வரி இடம் பெற்று விட்டது. அதற்காக அவர் (சபீதா) நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘மிகப்பெரிய அரசு பதவியில் இருக்கும் இவர், தவறு நடந்து விட்டது என்று கூறலாமா? அவர் உயர்ந்த பதவியில் உள்ளார். அவர் இப்படி சொல்லக்கூடாது. பொதுவாக இவர் மட்டுமல்லாமல் பல உயர் அதிகாரிகள் விதிமுறைகள் என்றால் அதை பின்பற்றுவது இல்லை. விதிமுறைகளுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றனர்’ என்று கூறினார். பின்னர், வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.’’

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 29 மார்ச், 2015

"மதுரை உயர்நீதி மன்றம் 5% RELAXATION – ஐ தள்ளுபடி செய்தது நீதியின் பார்வையில் ???

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வெள்ளி, 20 மார்ச், 2015

652 கணினி ஆசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் நீதிபதி உத்தரவு.

652 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கணினி ஆசிரியர்பணியிடம்

மதுரை மாவட்டம் தெற்குத்தெரு அருகே உள்ள மருதூரை சேர்ந்தவர் ஷோபனா.இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-நான், கணினி அறிவியலில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டுபி.எட் படித்துள்ளேன். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுமேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப13.10.2014 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்குவிண்ணப்பிப்பவர்கள் பி.ஈ., பி.சி.ஏ., பி.எஸ்சி(கணினி அறிவியல்),பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பை முடித்துபி.எட்., முடித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2வகுப்புகளுக்கு முதுகலைப் படிப்பை முடித்து பி.எட்., முடித்தவர்கள் மட்டுமேஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். பி.ஈ., பி.சி.ஏ., பி.எஸ்சி(கணினிஅறிவியல்),பி.எஸ்சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பைமுடித்து பி.எட்., படித்தவர்களை காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர்பணியிடங்களில் நியமிப்பது நியாயமற்றது. எனவே, கணினி ஆசிரியர் நியமனம் சம்பந்தமான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அந்த அறிவிப்புக்கு தடை விதிக்கவேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்து பி.எட்.,படித்தவர்களை மட்டுமே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேனியை சேர்ந்தவர் மனு

இதேபோன்று மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த எல்.தீபா, தேனிமாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த விஜயலடசுமி ஆகியோரும் மனு தாக்கல் செய்துஇருந்தனர். இவர் களை தவிர பாண்டியராஜன் உள்ளிட்ட 153 பேர் தாக்கல் செய்தமனுவில் கூறி இருப்பதாவது:-நாங்கள் 1999-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்தோம். அந்தசமயத்தில், எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் அறிவியல்), எம்.எஸ்சி(தகவல்தொழில்நுட்பம்), எம்.சி.ஏ., ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பி.ஜி.டி.சி.ஏ.படித்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்பின்பு,2008-ம் ஆண்டு 1880பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டோம். அவர்களில், 652 பேர் சில காரணங்களுக்காகபணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

முன்னுரிமை

அதுபோன்று பணியில் இருந்துநீக்கப்பட்டவர்களில் நாங்களும் அடங்குவோம். இந்த பிரச்சினை சம்பந்தமாகசுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், எங்களில் பி.எட். முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எங்களில் பலர்பட்டப்படிப்பை கணிணி அறிவியல் அல்லாத வேறு பாடத்தில் முடித்து விட்டு பி.எட்.படித்துள்ளனர். அதேவேளையில் முதுகலையில் கணினி அறிவியல் படித்துள்ளனர்.அதுபோன்று, வேறு பாடத்தில் பட்டப்படிப்பை படித்து பி.எட். முடித்து இருந்தாலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு எந்தவித முன்னுரிமையும் வழங்காமல் 652பணியிடங்களையும் நேரடியாக நிரப்ப அரசு முடிவு செய்து இருப்பது நியாயமற்றது.எனவே, அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 652 பணியிடங்களில் எங்களைபோன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்கூறப்பட்டுள்ளது.

இறுதித் தீர்ப்பே முடிவு

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில்விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில்வக்கீல்கள் டி.லஜபதிராய், லூயிஸ், ஈ.வி.என்.சிவா, அப்பாத்துரை ஆகியோர் ஆஜராகிவாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முருகானந்தம், ‘கணினி ஆசிரியர்பணிக்கு முறைப்படி தான் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதுசான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது‘ என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி,‘மனுதாரரின் கோரிக்கையை பொறுத்தமட்டில் முழுமையாக விசாரணை நடத்தி தான் முடிவுஎடுக்க முடியும். எனவே, கணினி ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்தவழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும். இறுதி விசாரணைக்கு பின்பு,இந்த நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும்போது சமவாய்ப்பு மறுக்கப்பட்டதாக பணிநியமனம் பெற்றவர்கள் கோர முடியாது‘ என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 19 மார்ச், 2015

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பைரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளைஉத்தரவிட்டது.

திருநெல்வேலி உமா, உசிலம்பட்டி பாண்டியராஜன் உட்பட 152 பேர் தாக்கல் செய்த மனு:
அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக 1999 ல் பணியில் சேர்ந்தோம். 2008 ல் பணி வரன்முறை செய்யப்பட்டோம். 2013ல் 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இது தொடர்பான வழக்கில் எங்களில் பி.எட்.,முடித்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 652 பணியிடங்களைநேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ளது. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் எங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பள்ளிக் கல்வித்துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும்,ஏற்கனவே இதுபோல் தாக்கலான வழக்குடன் சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மனுதாரர்களின் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 17 மார்ச், 2015

TET COURT NEWS: ஆதிதிராவிடர் /கள்ளர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் வழக்கு ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இன்று பிற்பகல் வாதத்திற்கு வந்தது இவ்வழக்கில் உரிய வாதியுமான ராமர் மற்றும் சுடலைமணி சகோதரரும் மற்றும் வழக்குக்கு உரிய இடைநிலை ஆசிரியர் நண்பர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் ஆனால் அரசுதரப்பு வழக்கறிஞர் ஆஜாரகததாலும் மேலும் சில காரணங்களுக்காக இன்று இவ்வழக்கு வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடது.....


மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்
By....
P.Rajalingam Puliangudi
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்