வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 நவம்பர், 2015

"இரத்த தேவை அழைப்பு எண் '104'



 , '104'சேவை 
இந்தியாவில் ஒரு சிறப்பு எண்...! 
"இரத்த தேவை அழைப்பு " சேவை(Blood on call)
இந்த எண்ணை அழைத்தால் உங்களுக்கு தேவைப்படும் ரத்தம் 4-மணி நேரத்திற்குள் 40 கி.மீ சுற்றுவட்டத்திற்குள் டெலிவரி செய்யப்படும்.
ஒரு யூனிட் ரத்தம் ரூ.450/- போக்குவரத்து செலவு
ரூ .100 ஒன்றுக்கு செலுத்த வேண்டும்.
இந்த சேவை மூலம் பல உயிர்கள் காக்கப்படும் ...!
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

சனி, 17 அக்டோபர், 2015

சென்னையில் இன்று பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 23 ஆயிரம் பணியிடங்களுக்கு 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் அளிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் சனிக்கிழமை நடைபெறும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில், 302 பெரு நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இதில், 23 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த முகாம் மூலம் பணிகளைப் பெற தமிழக அரசு வேலைவாய்ப்புத் துறையின் இணையதளமான (www.tnvelaivaaippu.gov.in)-இல் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

 தமிழக அரசின் தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு உள்பட்ட தண்டையார்பேட்டை சென்னை துறைமுக விளையாட்டு அரங்கில் இந்த முகாமை நடத்துகின்றன.
 முகாமை காலை 8 மணிக்கு அமைச்சர்கள் பி.பழனியப்பன், பி.மோகன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, டி.கே.எம். சின்னையா ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர்.
 பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: டி.வி.எஸ். சுந்தரம், ஹூண்டாய், பிளக்ஸ்ட்ரானிக்ஸ், ரினால்ட் நிசான், ரானே, வீல்ஸ் இந்தியா, ஜே.கே.டயர், போர்டு இந்தியா, இன்போசிஸ் பிபி., ஐ.டி.சி. சென்னை உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
 உணவுத் துறையில் சிறப்பிடம் பெற்று விளங்கும் சங்கீதா, தலப்பாகட்டி, அஞ்சப்பர் ஆகிய நிறுவனங்களும், ஜவுளி நிறுவனங்களான சென்னை சில்க்ஸ், நல்லி, ஆர்.எம்.கே.வி., போத்தீஸ் ஆகிய நிறுவனங்களும், நகை நிறுவனங்களான சரவணா கோல்டு ஸ்டோர்ஸ், ஜி.ஆர்.டி., பர்வீன் உள்ளிட்ட நிறுவனங்களும் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இவ்வாறாக 302 நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன.
 விண்ணப்பதாரர்களுக்கான வசதிகள்: மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தொழில்கல்வி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் பயின்றவர்களும் பங்கேற்கலாம். இவர்களுக்காக கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடி பேருந்து நிலையம், கிராஸ் சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் வருவாய்த் துறையின் சார்பில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 முகாம் வளாகத்தில் குடிநீர், கழிவறைகள், காத்திருப்பு அறை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
"5 சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்'
 முகாமில் பங்கேற்க வருபவர்கள் 5 சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 வயதுச் சான்றிதழ் (மதிப்பெண் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ்), கல்வி அல்லது தொழில்நுட்ப படிப்புச் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கடவுச்சீட்டு அளவுள்ள மூன்று புகைப்படங்கள், அனுபவச் சான்றிதழ்கள், தன்விவரக் குறிப்பு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். சான்றிதழ்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் அசலை எடுத்து வர வேண்டும்.
வாகனங்களை எங்கு நிறுத்தலாம்?
 முகாமில் பங்கேற்க வருபவர்கள் வாகனங்களை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற விவரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் விவரம்:
 *திருவொற்றியூர் மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள், கிராஸ் சாலையில் திரும்பி 
 ஏ.இ. கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.
 *தண்டையார்பேட்டை மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள் கிராஸ் சாலையில் திரும்பி ஏ.இ. கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.
 * வைத்தியநாதன் மேம்பாலம் மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள் ஐ.டி.எச். கிராஸ் சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி டி.எச். சாலை கிராஸ் சாலை திரும்பி கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும்.
 *ரயில் மார்க்கமாக வருபவர்கள் வ.உ.சி.நகர் ரயில் நிலையத்தில் இறங்கி பெரியார் நகர் தெரு வழியாக அருகில் உள்ள முகாம் நடைபெறும் இடத்தை அடையலாம்.
 *பேருந்து மூலமாக வருபவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை - கிராஸ் சாலை சந்திப்பில் இறங்கி கிராஸ் சாலை ஏ.ஏ. ஸ்கீம் சாலை வழியாக முகாம் நடைபெறும் இடத்தைச் சென்றடையலாம்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வட்டாட்சியர் அலுவலக இணைய வழி சேவை மையங்களில் தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி

திருவண்ணாமலை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இணைய வழி சேவை மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அரசின் இணைய வழி சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் வருவாய்த் துறை, சமூக நலத் துறைகளின் பல்வேறு சேவைகள் இணைய வழி மூலம் வழங்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பெறும் போது தெரிவிக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதி, கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி, விண்ணப்பத்தின் நகல்களைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கு ரூ. 50: அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு நிரந்தரமாகப் பதிவு செய்ய ரூ. 50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5,மாறுதல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்களைப் பெற ரூ. 20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இந்த மையத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

TNPSC: குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: பாலசுப்பிரமணியன்

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவராக பொறுப்பு வகிக்கும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 213 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வை, 27 ஆயிரத்து 552 பேர் ‌எழுதுகின்றனர்.

சென்னை எழும்பூரில் தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியன், இதற்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி


வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து, ஆதிதிராவிட மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வேலைவாய்ப்புகளுக் கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 22 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த இலவச பயிற்சி வகுப்பு களில், கல்லூரி பேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், மாண வர்களுக்கு பயிற்சி அளித்துவரு கின்றனர். இந்நிலையில், 10,000 வங்கி காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 3 மாத காலத்துக்கு வாராந்திர இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் இந்த இலவச வகுப்பில் சேர 9444641712, 9444030745, 9444982364, 9444928162, 9444241696 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என, பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் திலிலியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளான டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளான், கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்