செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜூலை, 2016

ஆசிரியை ஒருவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!


​ஆசிரியை ஒருவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!


திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியை ஒருவரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் எனும் கிராமத்தில் பெற்றோருடன் வசித்துவருபவர் பூமணி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், இன்று அதிகாலை வீட்டின் கதவு தட்டப்பட்டதை அடுத்து, கதவை திறந்துள்ளார்.

அப்போது வாசலில் நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமணியை வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூமணி, தீவிரசிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

பக்கத்துவீட்டினருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அவர்களே காரணம் என்றும் பூமணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து தப்பிச்சென்ற கும்பலை தேடிவருகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 23 ஜூன், 2016

திடீர் மின் தடையா? : அமைச்சரை கூப்பிடலாம்

மின்தடை தொடர்பாக, 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் வீட்டில், 044 - 24959525 என்ற தொலைபேசி எண்ணில், மின்தடை சம்பந்தமாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். ஆனால், அந்த எண்ணை, மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க, மின் வாரியம் தயக்கம் காட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

சனி, 18 ஜூன், 2016

அம்மா’ கைப்பேசி.. விரைவில்…நன்றி செய்திகள் .காம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்மா விலையில்லா கைப்பேசி திட்டத்திற்காக லாவா P7 என்ற மாடல் கைப்பேசிகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் இது குறித்த புகைப்படங்களும் உலா வருகின்றன.
அம்மா கை பேசி
ஆண்ட்ராய்டு V6.0 Marshmallow ஆபரேட்டிங் சிஸ்டத்த்தில் இயங்கும் டச் ஸ்க்ரீன் மொபைல்.
CPU – Quad-core 1.2 GHz.
RAM – 1 GB RAM.
Battery – 2000 mAh.
Camera – 5 MP with flash
SIM – 3G Dual Sim.
Internal Memory – 8 GB.
SD Card slot – up to 32 GB.
Size – 5.0 inches.
Weight – 153.1g.
Weight – 153.1g.
Amma Phone

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வில்லங்கச் சான்று ஒரு ரூபாயில் பெற இங்கே வாங்க!

வில்லங்கச் சான்று ஒரு ரூபாயில் பெற இங்கே வாங்க!
சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும்.
சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம்.
இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம்.
இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை செய்துள்ளது.
பொதுவாகவே ஈ.சி. கிடைக்க நிறைய பேர் தரகரை நாடுவார்கள்.
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஒன்றுக்கு மூன்று முறை நடையாய் நடக்க வேண்டும்.
இப்போது அந்தக் கஷ்டமே இல்லை.
ஒரு ரூபாயில் ஆன்லைனிலேயே எடுத்துவிடலாம்.
இதை வீட்டுக்கு கொரியர் அல்லது துரித அஞ்சலில்கூட அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்.
ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும்.
பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும்.
இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.
மேலும் பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும்.
சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.
இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.
அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன.
அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும்.
இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும்.
கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
திருமணத்தைப் பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/guideline_value.asp
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

‪#‎பொதுமக்களுக்கு_வேண்டுகோள்‬:--நன்றி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

1. தொடர் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கபடும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.
2. அத்தியவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கவும். முக்கிய தேவையின்றி வீட்டினை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கவும்.
3.கூடுமான வரை பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்.
4.தேங்கிய நீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்.கவனமாக இருக்கவும்
5.வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கண்காணிப்பது நலம்.
6.வாகனங்களை இயக்கும் முன் வாகனத்தின் நிலை, செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு நிலையை முன்கூட்டியே உறுதிபடுத்துங்கள்.
7.மரம் அருகில் நிற்காதீர்கள் வண்டிகளையும் நிறுத்தாதீர்கள்
8.மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் இருப்பு வையுங்கள் (இன்வெர்ட்டர் இருந்தாலும் )
9.மின்சாரம் இருக்கும்போதே தேவையானதை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்
10.அவசர கையிருப்புக்கு ATM ல்பணம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்
11.மருந்து மாத்திரைகள் அவசரத்தேவைக்கு வாங்கி வையுங்கள் மழையால் கடைகள் மூடப்பட்டால் சிரம்ம்
12.ப்ரெட்,முட்டை போன்ற உணவுப்பொருட்கள் அவசரநிலையில் உணவிற்கு உதவும்
13.தாழ்வான பகுதியிலிருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது அரசு தரும் உதவிகளை ஏற்று பாதுகாப்புடன் இருக்கவும்

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

சனி, 7 நவம்பர், 2015

இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெறவிருக்கும் தமிழக திருநங்கை


👆👆
==========================
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த தமிழகத்தை சேர்ந்த திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் அவர்பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. ஆனால் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.
அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகா யாஷினியை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்தார் பிரத்திகா யாசினி . வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கூறியது நீதிமன்றம்.
அதனால் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையதால் பிரத்திகா யாசினி எழுத்துத்தேர்வுக்கு அவர் அனுமதிக்கப்பட்டு
தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
மேலும் எறி பந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக தமிழக அரசு அறிவித்து அவரை நிராகரித்தது.
அந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு பிரத்திகா யாசினி நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு 05-11-2015 இன்று விசாரணைக்கு வந்தது. '
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர் என்றும் அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி வழங்க வேண்டும். மேலும் அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார். தமிழக திருநங்கை பிரித்திகா யாஷினி
ஏற்கனவே காவல்துறை பணியில் இந்திய அளவில் 2 திருநங்கைகள் காவலராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு

கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதன்பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின்போது வேறுஏதேனும் பிரச்னையை எதிர்கொள்ளவும் நேரிடலாம்.2001-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில் உள்ளவிவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும்போது இவையே அனுமதிக்கப்படுகிறது.குறிப்பாக, 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும்.
எனவே, கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், வரும் 24-ஆம் தேதிக்கு முன்பாக புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களைwww.passportindia.gov.in என்ற இணையதளத்திலும், 1800-258-1800 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வெள்ளி, 6 நவம்பர், 2015

ஆதார் அட்டை மிகவும் அவசியம் !!

கல்வி உதவித்தொகை, விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுகள், இன்னும் இதர பிற சலுகைகள் உரியவரைச்
சென்றடைய , சரியான புள்ளி விபரங்களுக்காக ஆதார் அவசியமாம்.
மேலும்
பாடநூல்கள் சரியான எண்ணிக்கையில் அச்சடிப்பதற்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர் பணிநிரவலுக்கும் உதவுமாம்.
ஆசிரியர் பணியிடங்களைத் தக்க வைக்க அதிக மாணவர்கள் எண்ணிக்கையைக் காட்டும் பள்ளிகளைக் கண்டறியவும் இது உதவும் என்று கூறப் படுகிறது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டியவை .

1. சங்கு சக்கரங்களை கண்டிப்பாக சிமெண்ட் தரையில் வைத்துதான் பொருத்த வேண்டும். மண் தரையில் வைத்து பொருத்தக் கூடாது.
2. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்து பொருத்தக்கூடாது.
3. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காளில் பட்டு தீ காயம் ஏற்பட்டுவிடும்.
4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்து பார்க்க கூடாது. தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.
5. பட்டாசு திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்க கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பத்திகுச்சிகளை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.
6. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியேதான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
7. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான தெருக்களிலோ உபயோகிக்ககூடாது.
8.பட்டாசுகளை தூக்கி எரியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ கூடாது.
9. ராக்கெட் வெடிகளை உபயோகிக்கும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.
10. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது.
11. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க செயுங்கள்.
12. குழந்தைகளை சட்டை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
13. பட்டாசுகளை கொளுத்தும் பொழுது இருக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.
14. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதிர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
15. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு

அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
"தரங் என்ற திட்டத்தின் கீழ் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன்), பிராட்பேண்ட், பி.போன் உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்புச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி சலுகையை வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தச் சலுகையைத் திடீரெனப் பாதியாகக் குறைத்தது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சலுகையில் மேலும் 5 சதவீதம் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு (Marketing Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.
75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரை அரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 3 நவம்பர், 2015

உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்:

உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்: அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன்
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவியரின், குடும்ப ஆண்டு வருமானம், 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. அதிகரித்து வரும் விலைவாசியால், 25 ஆயிரம் ஆண்டு வருமானம் என சான்றிதழ் வழங்குவதில், வருவாய்த்துறை அலுவலர்கள் தயக்கம் காட்டினர். இதனால், பல மாணவியர் உதவித்தொகை பெற முடியாமல் போனது.
இதற்காக, வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை இருந்து வந்தது. தற்போது, வருமான வரம்பை நீக்கி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விடுபட்ட மாணவியரின் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணியை, விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வெள்ளி, 30 அக்டோபர், 2015

யார் இந்த கோவன்?--நன்றி: ஆனந்த விகடன்

· 
மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !
சரி யார் இந்த கோவன்?
கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!
“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.
ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.
இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.
நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.
எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.
இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!”
______________________
நன்றி: ஆனந்த விகடன்
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

பாடகர் கோவன் தேச துரோக சட்டப் பிரிவில் கைது ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதா?

மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய 
கழகத்தின் பாடகர் கோவன் அவர்களை திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

குப்பையும் அழகும் !

 




நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே நான் அவர் காலில் விழுந்தேன் என்று மின்ட் தெரிவித்துள்ளார். பணம் , பேர் -புகழ் கிடைத்தால் பெற்றவர்களை மறந்து அலைந்து திரியும் லட்சக்கணக்காம பிள்ளைகள் மத்தியில் இப்படியும் ஒரு மனித நேயம் உள்ள மகள் இருக்கிறாள்...
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் திரு. இராபர்ட் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். ...ஆசிரியர் வாய்ஸ்

இன்று பிறந்தநாள் காணும்   அன்பு  நண்பர் திரு. இராபர்ட் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். ...
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

புதன், 14 அக்டோபர், 2015

90 வினாடிகளில் தகர்க்கப்பட்டது: மலேசிய விமானம் 'பக்' ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது எப்படி? (வீடியோ)

டந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்றுகொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்துகொண்டிருந்தபோது, விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
             
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து, நெதர்லாந்து நாட்டின் விசாரணைக்குழு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர வைக்கின்றன.

விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதாவது 10.1 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு எதிர்புறமிருந்து 'பக்' ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. 350 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் இருந்து பக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் வந்த ஏவுகணை, விமானத்தின் காக்பிட் பகுதியின் இடது பக்கத்தில் மேற்பகுதியை முதலில் தாக்கியுள்ளது.  இதில் உடனடியாக காக்பிட்டில் இருந்து விமானி, துணை விமானி, வழிகாட்டும் என்ஜீனியர் உள்ளிட்ட 3 பேரும் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த 90 வினாடிகளில் விமானம் வானத்திலேயே 2 துண்டாக உடைந்து சிதறியுள்ளது. பயணிகள் அனைவரும் ஏவுகணை தாக்கப்பட்டதால் மரணமடையவில்லை. 33 ஆயிரம் அடி உயரத்தில்  ஆக்சிஜன் பற்றாக்குறையால் மயக்கநிலைக்கு சென்றுள்ளனர். பின்னர் விமானம் வெடித்து சிதறியபோது இறந்திருக்கின்றனர். விமானத்தின் முகப்பு பகுதியை ஏவுகணை தாக்கியதற்கான அடையாளங்கள் 'காக்பிட்' பகுதியை ஆராய்ந்ததில்  உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உக்ரைனின் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய  விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பக் ஏவுகணையை ஏவியது யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  விமானத்தின் உடைந்த பாகங்கள், உக்ரைனில் இருந்து   ரயில் மூலம் நெதர்லாந்தின் கிளிஸ் ரின்ஜென் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விமானம் தகர்க்கப்பட்டு 15 மாதங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை, பக் ஏவுகணையை  தயாரிக்கும் மாஸ்கோவை சேர்ந்த  அல்மாஸ்-அண்டே நிறுவனமான  மறுத்துள்ளது.உக்ரைன் ராணுவம் 9எம்38 ரக ராக்கெட்டை வீசி மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த உண்மையை திட்டமிட்டு மறைப்பதாக அல்மாஸ்-அண்டே நிறுவனம் தெரிவித் துள்ளது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

புதன், 7 அக்டோபர், 2015

ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!

ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்கிறது. ஆனால், வாணிப கழகம் குறித்த காலத்தில், பருப்பு வகைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால், ரேஷன் கடைகளில், தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும், 1,200 ரேஷன் கடைகளுக்கு மட்டும், முழு அளவில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கம் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு, ஒவ்வொரு மாதமும், 60 சதவீத பொருட்கள் தான் வழங்கப்படுகின்றன. 


எனவே, வாணிப கழக அதிகாரிகள் பருப்பு, பாமாயில் அளவை குறைத்து வழங்கினால், அந்த விவரத்தை ரேஷன் கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 6 அக்டோபர், 2015

உரக்கக் கொட்டு பெண்ணே!-‪#‎வசந்தப்பிரியன்‬


உரக்கக் கொட்டு பெண்ணே!
மதவெறி மாள,
மாட்டுத்தோல் பறையை...
சாதி வெறி சாக,
கொட்டு சாப்பறையை...

ஆணாதிக்கம் அறுபட,
பெண்ணடிமைத்தனம் பொடிபட,
பழுக்கக் காய்ச்சிக் கொட்டு பெண்ணே!
பறையை...
வையம் முழுக்க மானுடக் காற்று வீச,
அதிரக் கொட்டு பெண்ணே!
பறையை...
பகைவர் செவிப்பறை கிழிய,
பழுக்கக் காய்ச்சிக் கொட்டு
பெண்ணே!
விடுதலைப் பறையை...
‪#‎வசந்தப்பிரியன்‬
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

திங்கள், 5 அக்டோபர், 2015

வள்ளலார் பிறந்த தினம் (அக்.5 1823)

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” எனத் தெரிவித்த வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் செய்திகளை அறிந்துகொள்ளும் வசதியினை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

நாம் அரசின் செய்திகளை இப்போது தொலைக்காட்சியிலோ அல்லது செய்தித்தாள்களின் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது வாட்ஸ்-அப் மூலம் ஒருவர் எங்கிருந்தாலும் தன்னிடம் உள்ள மொபைல் மூலம் எல்லா செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் முதல்வரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை வாட்ஸ்அப் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக செய்தித்துறை பிரிவு செய்து வருகிறது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்