தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 ஜூலை, 2016
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இன்று பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களை தன்கத்தே கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் வரிசையில் தற்போது News Feed வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதாவது இவ் வசதியின் ஊடாக செய்திகளை ஷேர் செய்து நண்பர்கள், உறவினர்களுடன் பகிரக்கூடியதாக இருக்கும்.
இந்த வசதியினை பல்வேறு வியாபார நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால் தற்போது நண்பர்கள் ஊடாக பகிரப்படும் செய்திகளை அதிகப்படுத்திக்
காட்டும் அதேவேளை நிறுவனங்களின் செய்திகளை குறைத்துக்காட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் பிணைப்பே மேம்படுத்த முடிவதுடன் புதிய
பயனர்களையும் உள்வாங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது
ஞாயிறு, 19 ஜூன், 2016
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடி இலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு
இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தை, 5 முதல், 14 வயது வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே செலுத்தும்.
சேர்க்கை:ஆனால், தமிழகத்தில் இந்த சட்டம், 5
முதல், 14 வயது வரைஉள்ள அனைத்து மாணவர் களுக்கு என இல்லாமல், வெறும் எல்.கே.ஜி., வகுப்புக்கு மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. தனியார் பள்ளிகளில், அரசின் உத்தரவுப் படி, கடந்த மே, 31ம் தேதி வரை மனுக்கள் பெறப் பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால், இதில் பல பள்ளிகள், இலவச மாணவர் சேர்க்கையிலும், நன்கொடையும், கல்வி கட்டணமு ம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக அரசு, 2014ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணத் தொ கையில், 20 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள தாக கூறப்படுகிறது. 2015 - 16ம் கல்வி ஆண்டில், 130 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு, பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால், கடனில் தவிக்கும் பள்ளிகள், மாணவர் களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிதி அளித்தால், மாணவர்களிடம் பணத்தைதிருப்பி அளித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளன.இது குறித்து, தமிழக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் தான், இந்த நிதியை தர வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், தாமதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.
தீர்மானம்
இதற்கிடையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க கூட்டம், அதன் பொது செய லர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில், தமிழக அரசு பாக்கி வைத்துள்ள, 150 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும்; தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கையில் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெள்ளி, 8 ஜனவரி, 2016
வியாழன், 26 நவம்பர், 2015
WhatsApp சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு. Download Now.
WhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளை செய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.
1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லது முக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp இப்போது புதிய பதிப்பில் கொடுத்து உள்ளது. படம் பாருங்கள்.
இங்கே கிளிக் செய்து WhatsApp 2.12.366 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)
இன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். என்ன சந்தோஷம்தானே. கீழே வீடியோ தயாரித்து இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.
2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விரைவில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம். இது பற்றி விரிவாக தனி பதிவில் பார்ப்போம்.
3. இப்போது WhatsApp 2.12.366 பதிப்பு முதல் WhatsApp Groupகளில் 200 மெம்பர் வரை இணைக்க முடியும். இந்த வசதி இப்போது டெஸ்டிங்ல இருக்கு. சென்ற ஆண்டு ஆரம்பத்தில் 50 மெம்பர்கள் மட்டுமே ஒரு குருப்ல இருக்க முடியும். WhatsApp நிறுவனத்தை Facebook வாங்கியதும் 50ல் இருந்து 100 மெம்பர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்று நீட்டிதார்கள், இப்போது 200 பேர் வரை இணைக்க முடியும். விரைவில் இந்தியாவில் இந்த வசதி வந்து விடும்.
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
நன்றி: ஸ்ரீராம், Thagavalguru.com
ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?
ஆண்ட்ராய்ட் மொபைல் என்றாலே ஒரே பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாகிவிடும், எனவே மொபைலில் Greenify App பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்கும் என என் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். இதனை முறையாக பயன்படுத்த தெரியாத பலர் வீடியோ பதிவாக பதிவிடும் படி மின்னஞ்சல் செய்தவண்ணம் இருந்தார்கள். அதனால் இந்த பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify முறையாக பயன்படுத்துவது எப்படி என்பதை வீடியோவும் முழுமையான விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அப்ளிகேஷன்னை ரூட் மற்றும் ரூட் செய்யாதவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் Greenify PRO பதிப்பை இலவசமாக தளத்தில் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.
வியாழன், 1 அக்டோபர், 2015
Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.
சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.
சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்தது. சில மாதங்களுக்கு முன் Samsung Galaxy Grand Prime என்ற 4G மொபைலை வெளியிட்டது. இப்போது Samsung Galaxy Core Prime VE என்ற பெயரில் ஒரு பட்ஜெட் மொபைல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் உள்ள சிறப்பு வசதிகளை இந்த பதிவில் பார்ப்போம்.
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது.
இந்த மொபைலின் எடை 140 கிராம். 5.50-inch பெரிய ஸ்கிரீன், 1080x1920 pixels HD டிஸ்ப்ளே, 16GB உள் நினைவகம், 2GB RAM, 1.7GHz octa-core MediaTek MT6752 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் ஒஸ், 13MP பின் பக்க காமிரா, 5MP முன் பக்க காமிரா மற்றும் 3000 mAh பேட்டரி என சிறப்பான வசதிகளோடு இருக்கிறது.
விலை சுமார்: 10999 (இந்தியாவில் விலை அறிவிக்கபடவில்லை)
Lenovo A7000 Plus முழு விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
September 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
152.60 x 76.20 x 7.99
|
Weight (g)
|
140.00
|
Battery capacity (mAh)
|
3000
|
Removable battery
|
No
|
SAR value
|
0.00
|
DISPLAY
Screen size (inches)
|
5.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1080x1920 pixels
|
HARDWARE
Processor
|
1.7GHz octa-core
|
Processor make
|
MediaTek MT6752
|
RAM
|
2GB
|
Internal storage
|
16GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
CAMERA
Rear camera
|
13-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.0
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
| |
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SIM 2
| |
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/ Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
No
|
Barometer
|
Yes
|
பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.
தகவல்குரு மதிப்பீடு: 92%
இந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை விவரங்களை ஆசிரியர் வாய்ஸ் விரைவில் அறிவிக்கும்.
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்.
ஆண்ட்ராய்ட் மொபைலில் பல வசதிகள் இருந்தாலும் இரண்டு பலவீனம் இருக்கு. ஒன்று பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். மற்றொன்று சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும். இந்த இரண்டு சிக்கல்களை தீர்க்கும் வகையில் பேட்டரி சேமிப்பை அதிகபடுத்தியும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய மொபைல்கள் தற்போது வர தொடங்கி உள்ளது. இருப்பினும் இன்று நான் தரக்கூடிய டிப்ஸ் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.
1. ஃப்ளைட் மோட் அல்லது ஏரோபிளான் மோட்
உங்கள் மொபைலை Aeroplane மோடில் சார்ஜ் செய்யுங்கள். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை நார்மல் மோடிலிருந்து Aeroplane மோடுக்கு மாற்றுவதால் பல அப்ளிகேஷன்கள் பேட்டரி சேமிப்பை விரையமாக்காது. எனவே மிக விரைவாக சார்ஜ் ஆகும். பலர் சார்ஜ் செய்யும் போது மொபைலை ஆப் செய்து சார்ஜ் செய்கிறார்கள். அதுவும் நல்ல ஐடியாதான். ஏரோபிளான் மோட் மாற்றி சார்ஜ் செய்தால் மேலும் பெட்டர். இது போல செய்வதால் எந்த பலவீனமும் மொபைலுக்கு வராது ஆனால் அழைப்புகளை பெற இயலாது. உங்கள் மொபைலின் Quick Settings மெனுவில் Aeroplane என்பதை ஒரு டச் செய்யுங்கள். உங்கள் நெட்வொர்க், வைஃபை என அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டு விரைவான சார்ஜ் ஆக வழிவகை செய்யும்.
கீழே மேலும் சில டிப்ஸ் தருகிறேன் பயன்படுத்துங்கள்:
2. சார்ஜர் மூலம் மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.
இப்ப பெர்சனல் கணினி அல்லது லேப்டாப் வைத்து இருப்பவர்கள் தங்கள் கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்கிறார்கள். இது மொபைலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். கணினியில் உள்ள USB 2.0 வெறும் .5 முதல் 2.5 வாட்ஸ் வரை மட்டுமே மின் கடத்தும் எனவே சார்ஜ் ஆக நேரம் ஆகும் மேலும் உங்கள் மொபைல் நாளுக்கு நாள் பலவீனமடையும் வாய்ப்பு அதிகம்.
3. பவர் சேவர் மோட்
இரவு நேரங்களில், மொபைலை அதிகம் பயன்படுத்தாத நேரங்களில் மொபைலை Power Saver மோடுக்கு மாற்றி விடுங்கள். இதனால் 35% கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பில் இருக்கிறது.
4. தேவை இல்லாத வசதிகளை ஆப் செய்யுங்கள்
நம் மொபைலில் எப்போதாவது பயன்படுத்தும் ஆப் நிறைய இருக்கு. சான்றாக Bluetooth, GPS, Wi-Fi, Printer, NFC போன்றவற்றை ஆப் செய்து வைப்பதே நல்லது. தேவைப்படும் போது மட்டும் அதனை பயன்படுத்திகிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும்.
இதை தவிர திறந்த அனைத்து அப்ளிகேசனையும் குளோஸ் செய்ய மறக்காதீங்க. தேவைப்பட்டால் Greenify App பயன்படுத்துங்கள்.
நன்றி: http://www.thagavalguru.com
Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.
ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015ம் ஆண்டில் நவம்பர் மாதம் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க பெறும் மொபைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முதல் கட்டமாக Nexus 5, Nexus 6, Nexus 9 மற்றும் Nexus Player சாதனங்களுக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்க்கு அடுத்த கட்டமாக கீழே பட்டியலில் இடம் பெறும் மொபைல்கள் அனைத்துக்கும் படிபடியாக ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க இருக்கிறது.
IFA2015: Lenovo Vibe P1M பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் 2GB RAM, 4000 mAh பேட்டரி, 16GB Storage, 8MP Camera என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம்.
ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1M ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.
IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம்.
ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.
IFA2015: Lenovo Vibe S1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 32GB Storage பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம்.
ஜெர்மனி நாட்டில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe S1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.
தொழில்நுட்பம்: WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். WhatsApp பரவலாக அனைவரும் பயன்படுத்த தொடங்கிய போது பிரபல சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் கூட இரண்டாம் பட்சம் ஆகி போனது. இதை முன்கூட்டியே தெரிந்துதான் பேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது நினைவிருக்கலாம். இன்று ஒரு பில்லியன் அதாவது பத்து கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் வாட்ஸ்ஆப்தான்.
வாட்ஸ்ஆப்ல உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து இருந்தால் நேரடியாக நீங்கள் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுப்பிடிக்கலாம். எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1. அந்த ந(ண்)பரின் last seen மற்றும் online போன்ற விவரங்கள் தெரியாது. ஆனால் இதை மட்டும் வைத்து பிளாக் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இப்போது last seen மற்றும் ஆன்லைனில் இருப்பதை மறைக்க Privacy செட்டிங்ஸ்ல வழி இருக்கு.
2. உங்களை பிளாக் செய்தவருக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் அனுப்பினால் ஒரு டிக் மட்டுமே தெரியும். அதாவது WhatsApp சர்வர்க்கு உங்கள் மெசேஜ் சென்றடைந்து விட்டது. உங்கள் மெசேஜ் அனுப்பியவருக்கு டெலிவரி ஆகாது. இதை வைத்து உறுதியாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்பதை சொல்லிவிடலாம். கீழே படம் பாருங்கள்.

3. உங்களை பிளாக் செய்தவர் Profile படம் அல்லது வேறு பெயர் மாற்றி இருந்தால் அது உங்களுக்கு அப்டேட் ஆகாது. பழைய படமும், முந்தைய ப்ரோஃபைல் பெயரும் எப்போதும் உங்களுக்கு மட்டும் மாறவே மாறாது. இதை வைத்தும் உறுதியாக நீங்கள் அந்த நபரால் பிளாக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்பதை சொல்லிவிடலாம்.
4. நீங்கள் WhatsApp மூலம் கால் செய்தால் உங்களை பிளாக் செய்த நபருக்கு கால் போகாது/ரிங் ஆகாது.
இந்த நான்கு வழிகளில் உங்களை ஒருவர் பிளாக் செய்துள்ளாரா என்பதை கண்டறியலாம்.
நன்றி: http://www.thagavalguru.com
சனி, 29 ஆகஸ்ட், 2015
செயலி புதிது: உலகமே உங்கள் அலுவலகம்!
நம் காலத்துச் செயலியாக ‘கியூப் ஃப்ரி’ அறிமுகமாகியிருக்கிறது. அதாவது அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக உருவாகியிருக்கிறது.
லேப்டாப் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றிக்கொள்ளலாம் என்னும் சுதந்திரத்தை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது. இதனால், ஓட்டல் வரவேற்பறை, பொது நூலகம், கஃபேக்கள் எனப் பல இடங்களில் இருந்து வேலைபார்க்க முடிகிறது. அலுவகலத்தில் இருந்து விடுபட்ட நவீன நடோடிகளும் சரி, அலுவலகத்திற்கு வெளியே பணி புரியும் தேவை உள்ளவர்களும் சரி, இத்தகைய பொதுவான பணியிடங்களை விரும்புகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுகிறது கியூப் ஃப்ரி செயலி.
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் எங்கெல்லாம் பொதுப் பணியிடங்கள் அல்லது பகிர்வுப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை இந்தச் செயலி வரைபடம் மூலம் சுட்டிக்காட்டுகிறது. அந்த இடங்களின் தன்மை, அங்குள்ள வை-பை வசதியின் ஆற்றல் உள்ளிட்ட விவரங்களையும் தருகிறது. அது மட்டுமா ? அங்கே இருக்கும் சக நடோடி பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அவர்களுடன் தொடர்புகொள்ளவும் வழி செய்கிறது. இணைந்து பணியாற்றக்கூடிய தோழர்களையும் தேடலாம். கூட்டு முயற்சிப் பிரியர்களுக்கு பயன் தரக்கூடிய செயலி இது!
செயலியைப் பயன்படுத்த: http://cubefreeapp.com/
வியாழன், 27 ஆகஸ்ட், 2015
புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.
புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.
புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.
அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .
பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
புதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
புதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.
டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.
இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/
வியாழன், 5 பிப்ரவரி, 2015
உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன்
Facebook Messenger, Gmail, Twitter மற்றும் பல சேவைகளினூடாக உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் அப்பிளிக்கேஷன் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Glympse Express எனும் இந்த மொபைல் அப்பிளிக்கேஷன் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் குறுஞ்செய்தி மூலமாகவும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.
திங்கள், 2 பிப்ரவரி, 2015
பூமியின் எந்த இடத்தையும் பெரிதாக்கி பார்க்க
நாசா வேர்ல்டு விண்ட்(WORLD WIND) மென்பொருள் பூமியில் எந்த இடத்திலும் செயற்கைக்கோளின் ஏற்றக்கோணத்தில் இருந்து பெரிதாக்கி பார்க்க உதவுகிறது. லாண்ட்சாட் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஷட்டில் ரேடார் டோபோகிராபி மிஷன் தரவு பார்க்க நமக்கு வழி வகை புரிகிறது.
புதன், 14 ஜனவரி, 2015
பேஸ்புக்கில் வன்முறையான வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தடை
யூடியூப்பினை தொடர்ந்து தற்போது பேஸ்புக் தளத்தில் அதிகளவான வீடியோ கோப்புக்கள் பகிரப்பட்டு வருகின்றன.இதேவேளை வன்முறையான வீடியோக்களை பகிருவதற்கு யூடியூப் தளம் சில வருடங்களுக்கு முன்னரே தடை விதித்திருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
















