செவ்வாய், 6 அக்டோபர், 2015
வியாழன், 3 செப்டம்பர், 2015
திருவோணம் ஒன்றியத்தில் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட 91 TNPTF-ன் இரும்புத் தூண்களின் பெயர் பட்டியல் CRC & School & Designation வாரியாக பட்டியல்..
————–———————
பின்னையூர் :
1. மதியழகன்- இ.நி.ஆ
2. கிருஷ்ணவேணி- த.ஆ
3. ஜோதிலெட்சுமி- இ.நி.ஆ
4. பூங்கோதை- த.ஆ
5. பாலாமணி- இ.நி.ஆ
6. ராஜேஸ்வரி- இ.நி.ஆ
7. உஷா நந்தினி- இ.நி.ஆ
8. மும்தாஜ்- த.ஆ
9. செந்தாமரை- த.ஆ
10. சத்யா- இ.நி.ஆ
11. பத்மாவதி-இ.நி.ஆ
12. பிரகாஷ்- இ.நி.ஆ
13. மேரிபுஷ்ப அனிதா-இ.நி
14.முத்தமிழ்ச்செல்வி-இ.நி.ஆ
15. கிறிஸ்டி- த.ஆ
16. உமா- இ.நி.ஆ
17. சின்னப்பன்- இ.நி.ஆ
18. ஜாக்குலின்- இ.நி.ஆ
19. மெர்சி- இ.நி.ஆ
20. முத்துராமன் -இ.நி.ஆ
21. சகிலாதேவி- இ.நி.ஆ
22. விஜயலெட்சுமி- இ.நி.ஆ
23. ஆனந்த்- ப.ஆ
————————————————
சதுர்காடு :
24. கலைவாணி- த.ஆ
25. தேவராஜன்- இ.நி.ஆ
26. கிரேஸ்லீலா- இ.நி.ஆ
27. மெட்டில்டா ஜூலியட்-த.ஆ
28. கல்பனா- இ.நி.ஆ
29. மாரிக்கண்ணு- த.ஆ
30.ராமகிருஷ்ணமூர்த்தி-இ.நி
31. ரமணி- இ.நி.ஆ
32. கோமளாதேவி- த.ஆ
33. பிரியா- இ.நி.ஆ
34. சுகன்யா- இ.நி.ஆ
35. சொரூபராணி -இ.நி.ஆ
36. திவ்யா- இ.நி.ஆ
37. தீபவர்ஷா- இ.நி.ஆ
38. வில்லியம்- இ.நி.ஆ
39. டெஸ்கோலா- இ.நி.ஆ
———————————
காரியாவிடுதி :
40. சின்னத்துரை- த.ஆ
41. விமலா டார்வின்- இ.நி.ஆ
42. நஸிமா பேகம்- இ.நி.ஆ
43. பாக்கியராஜ்- இ.நி.ஆ
44. ஜெயந்தி- இ.நி.ஆ
45. நல்லம்மாள்- இ.நி.ஆ
46. அக்ஸிலியா
அருள்ஜோதி- த.ஆ
47. துரைராஜ்- த.ஆ
48. லெட்சுமி- இ.நி.ஆ
49. மேரிகிருஸ்துராணி-இ.நி
50. சவரியம்மாள்- த.ஆ
51. ரிட்டு பிரீத்தி- இ.நி.ஆ
52. சித்ரா- த.ஆ
53. சந்திரகுமாரி- த.ஆ
54. முனீஸ்வரி-இ.நி.ஆ
—————————————————
பணிகொண்டான் விடுதி :
55. வித்யாலெட்சுமி- த.ஆ
56. ஜெயராணி- இ.நி.ஆ
57. ஆனந்த்குமார்- இ.நி.ஆ
58. ஜாக்குலின்- ப.ஆ
59. சேவியர் - த.ஆ
60. முருகராஜ்- இ.நி.ஆ
61. சந்தோஷ்- இ.நி.ஆ
62. குமார் - த.ஆ
63. சதீஸ்குமார் - இ.நி.ஆ
64. சோபியா- இ.நி.ஆ
65. அன்புவிழி - இ.நி.ஆ
66. டாரத்தி - இ.நி.ஆ
67. திருமேணிநாதன்-இ.நி.ஆ
————————————
திப்பன்விடுதி :
68. ரவிச்சந்திரன்- ந.த.ஆ
69. ரெங்கநாயகி- ப.ஆ
70. கோவிந்தராஜ்- ப.ஆ
71. சாந்தி- இ.நி.ஆ
72. பிரீத்தா- இ.நி.ஆ
73. அய்யாத்துரை- ந.த.ஆ
74. மணிகண்டன்- இ.நி.ஆ
75. கோமதி- இ.நி.ஆ
76. தாயம்மாள் - இ.நி.ஆ
77. சரஸ்வதி -த.ஆ
78. ரஞ்சிதம் செலின் -இ.நி.ஆ
79. பிரேம்நாத்- இ.நி.ஆ
80. மணிமேகலை- இ.நி.ஆ
81. கண்ணன்- இ.நி.ஆ
82. செல்வராணி- இ.நி.ஆ
———————————
நெய்வேலி-தெற்கு :
83. சுவாமிநாதன்- த.ஆ
84. கனகா- இ.நி.ஆ
85. மனோகரி- இ.நி.ஆ
86. வெங்கடேசன்- ப.ஆ
87. ஜான்சி- இ.நி.ஆ
——————————————
மேலகொள்ளுக்காடு:
88. சுகுனா- த.ஆ
89. புளோரா- த.ஆ
90. லூர்துடெய்சி- த.ஆ
91. மோகனபுஷ்பலீலா-இ.நி
TNPTF strike participater list district wise
TNPTF strike participater list district wise
1) Dindukal- 926.
2) velour - 920.
1) Erode-509.
2)Puthukottai-530.
3) Thanjavur -240.
4)karur-599.
5)villupuram-350.
6)Namakkal-385.
7)CUDDALORE-105
Yesterday strike Record break:
Total participated-9878
school closed-732
Highest participated dt Dindukkal-926
Next Vello-920
Union leval highest Gudalur-262
புதன், 2 செப்டம்பர், 2015
அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் கடலூர் மாவட்ட பதிவு
என் தோழனே
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! (காலுக்குச்...)
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையுமில்லை - என் தோழனே
உழைத்திளைத் தோமேயமடா (காலுக்குச்...)
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா! (காலுக்குச்...)
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாம் அழுவோமே - என் தோழனே
வீடு முச்சூடும் அழும் (காலுக்குச்...)
கடன்கொடுப்பார் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என் தோழனே
திண்டாட்டம் கொல்லுமடா! (காலுக்குச்...)
வக்கில்லை யானாலும்
ஏங்கி இரந்துண்ணவோ - என் தோழனே
எங்கள் மனம் கூசுதடா! (காலுக்குச்...)
கொலைதிருட்டு அறியோம்
இச்சகப் பேச்சறியோம் - என் தோழனே
எத்தும் புரட்டறியோம் (காலுக்குச்...)
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா! (காலுக்குச்...)
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு? (காலுக்குச்...)
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே
இம்சை முறைகளெல்லாம் (காலுக்குச்...)
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
தோழா நாளை [செப்டம்பர்-2]
காஞ்சீபுரம், திருவள்ளூரில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெ.முருகதாஸ் தலைமையில் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படித்து வேலை இல்லாமல் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சீனுவாசன், மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், ஜெய்சங்கர், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100–க்கும் மேற்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
திங்கள், 31 ஆகஸ்ட், 2015
சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
Computer Instructor Transfer Regarding
முற்றுகையை தொடர்ந்து 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டது குமரியில் 28 காலியிடம் மறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு :
காலிப்பணிடம் மறைக்கப்பட்டதாக புகார் கவுன்சலிங்கை புறக்கணித்ததால் பரபரப்பு
அதில், தமிழ், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஒன்பது காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டாக புகார் எழுந்தது. அதனால், அதிர்ச்சி அடைந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்டோர், கவுன்சிலிங்கை புறக்கணிப்பு செய்து, கவுன்சலிங் நடந்த அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம், 1 மணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், ஆசிரியர்களை சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, 2 மணிக்கு கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ராமு கூறியதாவது: காலையில் கம்ப்யூட்டர் திரையில் காலியிடங்களாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள், கவுன்சலிங்கிற்கு முன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட காலிப்பணியிட பட்டியலில் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை தவிர்த்து, அனைத்து இடங்களுக்கும் முறையாக கவுன்சலிங் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸிடம் கேட்டபோது, ""எந்த காலியிடமும் மறைக்கப்படவில்லை; பாடவாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில், 17 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
அமைச்சு பணியாளர்கள் கலந்தாய்வு புறக்கணிப்பு இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
இந்நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களை தரக்குறைவாக பேசிய, தேவர்மலை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் கலந்தாய்வு புறக்கணிப்பு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் பணியாற்றும், எட்டு யூனியன்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நேற்று காலை முதலே, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.
அப்போது, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி ஆகியோர் மட்டும் பள்ளியில் இருந்ததாகவும், கலந்தாய்வு செய்யும் அதிகாரிகள் இல்லை என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர், நிர்வாகிகள் தலைமையில் தனித்தனியாக குற்றம்சாட்டினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி அமர்ந்திருந்த அறையை முற்றுகையிட்டு, அறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அமைதி காத்தனர்.
இதற்கிடையே, 12.30 மணிக்கு, கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள், பள்ளிக்கு வந்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கினர், என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பெரிய்யய்யா பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன், போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், போராட்டத்தை கைவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்பதாக அறிவித்தனர்.
அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், இணை இயக்குனர் குப்புசாமியிடம் சென்று, அரசு விதிமுறைப்படி கலந்தாய்வு நடத்த வேண்டும், என பிரச்னை எழுப்பியதால், மீண்டும் பிரச்னை உருவானது. அரை மணி நேரம் நடத்த பேச்சு வார்த்தைக்கு பின், எவ்வித முறைகேடும் இல்லாமல், கலந்தாய்வு நடத்தப்படும், என இணை இயக்குனர் குப்புசாமி உறுதி அளித்ததின் பேரில், நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
இணை இயக்குனர் குப்புசாமி கூறுகையில்,""கலந்தாய்வு நடத்துவற்காக, காலை, 9.45 மணிக்கு, நான் வந்து விட்டேன். அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல், புறக்கணிப்பு செய்தனர்,'' என்றார்.
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரிக்கை
AATCHIYAR KANAVU
9:26 AM
SANGAM
No comments
சிறப்பாசிரியர்களின் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட ஊதியத்தை நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வங்கி வரைவோலையாக வழங்கியதற்கு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் கலை ஆசிரியர் சங்கம் முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கான ஓவியத் தேர்வு பாடத்திட்டம் மிகவும் கடுமையாக உள்ளதால் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஏற்கெனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்வுத் துறையில் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சி, பள்ளிக் கல்வி இயக்குநரால் நடத்தப்படும் டிடிசி எனப்படும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி என்பவற்றின் அடிப்படையில் நியமனம் என்பதே நடைமுறையாகும்.
ஆனால், தற்போது போட்டித் தேர்வு முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் இதற்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஓவியப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கு போட்டித் தேர்வு ஜுன் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பாடத் திட்டம் இப்போட்டித் தேர்வில் இடம் பெறக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாவிட்டால் போட்டித் தேர்வை நீக்கிவிட்டு, மாநிலப் பதிவு முன்னுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வியாழன், 2 ஏப்ரல், 2015
இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.
AATCHIYAR KANAVU
9:57 AM
SANGAM
No comments
ஏப்ரல் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ஐம்பெரும் விழாவில் 1000 பக்கங்கள் கொண்ட அரசாணைகள் தொகுப்பு வெளியிடுவது பற்றி இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். இந்த முயற்சியை வரவேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக் கடிதங்களை அனைத்து இயக்குநர்களும் வழங்கினார்கள்.இந்த சந்திப்பின் போது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தம்பு. இராமதாஸ் உடன் இருந்தார்.
செவ்வாய், 24 மார்ச், 2015
வியாழன், 19 மார்ச், 2015
அரசுப்பள்ளிகளை மூடி அதன் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியானதா??- வரும் ஞாயிறு 1மணிக்கு கலைஞர் தொலைக்காட்சி
AATCHIYAR KANAVU
11:57 AM
SANGAM
No comments
ஆசிரியர் சொந்தங்களே கலைஞர் தொலைக்காட்சியில், அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு அதன் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியானதா என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழக மாநிலதலைவர் செல்லத்துரை அவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி அவர்கள் , பல்வேறு ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு விவாதம் நடத்தினார்கள்..
இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு 22.03.2015 அன்று பிற்பகல் 1மணி அளவில் நெஞ்சுப்பொறுக்குதில்லையே பகுதியில் ஒளிப்பரப்பாகின்றன....
இதில் மாநில தலைவர் செல்லத்துரை அவர்கள் இன்றைய ஆசிரியர்களின் நிலை, வேலைவாய்ப்பு, காலிப்பணியிடம், ஆசிரியர்களின் எதிர்கால நிலை, ஆசிரியர்களின் மனக்குமுறல் குறித்து புள்ளிவிவரத்தோடு எடுத்துரைக்கிறார் காணத்தவறாதீர்கள்....
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ..
செவ்வாய், 17 மார்ச், 2015
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு
AATCHIYAR KANAVU
6:24 PM
SANGAM
No comments



