
வெள்ளி, 3 ஏப்ரல், 2015
வியாழன், 2 ஏப்ரல், 2015
வரும் ஜூன் முதல்வாரத்தில் டி.இ.டி 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது வதந்தீ...
AATCHIYAR KANAVU
6:18 PM
TET NEWS
No comments
சிலர் வரும் ஜூன் மாதத்திற்குள் 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் நிரப்ப வாய்ப்பு ய்ள்ளது என வதந்தீகளை பரப்பி வருகின்றனர் ...
தற்போது ஆசிரியர் பணிநியனங்கள் நிரப்பிட உச்சநீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடை உள்ளது...
மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு எவ்வித பணியையும் தொடர முடியாது. ஆசிரியர் பணிநியமனங்களில் எந்தவிதமான முறை பின்பற்றப்படும் என தீர்ப்பு வந்த பிறகே பணியிடம் நிரப்ப வேண்டுமென்றால் முதலில் காலிப்பணியிடத்திற்கான நோட்டிபிகேசன் விடப்பட்டு, பின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு,பள்ளிகளின் காலிப்பணியிட ரிசர்வேசன் விவரம் அறியப்பட்ட பின்னரே அதற்கான பணியினை மேற்கொள்வார்கள் ஆகவே வரும் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் பணியிடம் என சிலர் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே...
Article by...
P.Rajalingam Puliangudi...
புதன், 1 ஏப்ரல், 2015
உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்குகள் விரைவில் முடிவது இழுபறி....
AATCHIYAR KANAVU
1:41 PM
TET NEWS
No comments
சனி, 28 மார்ச், 2015
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் வரும் திங்கள் திருப்பம் வருமா??
AATCHIYAR KANAVU
12:01 PM
TET NEWS
No comments
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.... கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவுகளில் கொண்டுவரப்பட்ட மதிப்பெண் தளர்வு மற்றும் தகுதி காண முறை தொடர்பான வழக்குகள் இறுதி நிலையை எட்டி உள்ளது.அரசும் தாங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்து விட்டதால் வழக்கு விரைவில் தீர்ப்பு நிலையை எட்டும்.
மேலும் வழக்கு தள்ளுபடி செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் நீதியரசரின் இடைக்கால உத்தரவு சற்று நமக்கு தெம்பூட்டும் வகையில் அமைந்து உள்ளது.தயவு செய்து அனைத்து ஆசிரிய நண்பர்களும் புரிந்து கொள்ளுங்கள். gg.o 25 ஐ மதுரை உயர்நீதி மன்ற கிளை ஏற்கனவே ரத்து செய்து பல மாதங்கள் ஆகிறது.ரத்து செய்யப்பட்ட அரசாணையை கொண்டு பலன் அடைந்தவர்களையும் ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்பது வாதியின் வழக்கு.. இதன் மூலம் 3000 நபர்கள் மட்டுமே வெளிவர இயலும்..மேலும் பின்வரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு முறை இதே போன்று தன தொடரும்.. அப்போதும் 100 க்கு மேல் மதிப்பெண் பெற்றாலும் கடந்த கால தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மாற்றம் என்பது சத்தியம் அல்ல.
ஆகவே g.o 71 ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும்,அதில் உள்ள குறைகளை நீதியரசருக்கு மிகவும் ஆழமான விவாதத்துடன் எடுத்துரைத்து g.o 71 வரும் களங்களில் நீக்கம் செய்யவும் மற்றும் இந்த ஆணையை கொண்டு பணி நியமனங்கள்நடைபெற்றதால் தேர்வு முறை சரியாய் நடைபெற இயலாததை கூறியும் மேற்கண்ட பணி நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்து புதிய முறைப்படி தேர்வுப் பட்டியல் விடப்பட்டு அதன் படி நியமனங்கள் நடைபெறுவதே நீதி மன்றம் வழங்கும் சரியான நீதியாக அமையும்.இல்லையேல் g.o 71 ஆல் பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு நியமனம் வரும் கல்வியாண்டில் காலி பணியிடங்களை கருத்தில் கொண்டு வழங்கி விட்டு அதற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கொள்ள புதிய தகுதி தேர்வை அறிவிக்கலாம் என்ற தீர்ப்பு பெற நம் வழக்குரைஞர்கள் போராடியே தீர வேண்டும்.ஏன் என்றால் இதற்கு மேல் முறையிடவும்,நீதி பெறவும் நீதி மன்றங்கள் இல்லை.எனவே நமது முழு முதல் பிரச்சனையான g.o 71 ஐ முற்றிலும் நீக்க முயற்சி எடுங்கள். g.o 71 நீக்கப்பட்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளபட்டால் g.o 25 மட்டும் அல்ல...தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு மட்டும் வேண்டாம்.அது ஆசிரியர் மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரசு பணிக்கு தேர்வு செய்கையில் மதிப்பெண் தர அடிப்படையில் தேர்வு செய்யவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 90 மதிப்பெண் பெற்றால் தகுதி பெறவும் நாம் நீக்கம் செய்ய வேண்டியது g.o 71 மட்டுமே.
காலம் விரைவில் 90 க்கு மேல் பெற்று காத்திருபவனின் கைகளில் பூச்செண்டு தருமா என திங்கள் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Thanks To
G.Sandra mohan
வியாழன், 26 மார்ச், 2015
பழைய முறையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு....
AATCHIYAR KANAVU
6:57 PM
TET NEWS
No comments
பழைய முறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுச்சேரி அரசு பணி வழங்க வேண்டும் என, பட்டய பயிற்சி பெற்ற வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பட்டயப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 400 பேர் டெட் (டிஇடி) தேர்வில் 90 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறோம். அரசு பள்ளிகளில் காலியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு இதுவரை டெட் தேர்வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்களையே தேர்வு செய்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளி கல்வித் துறை படிப்படியாக சி.பி.எஸ்.இ., திட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவதால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதிலிருந்து 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும்; இதுவரை டெட் தேர்வில், தேர்வு பெறாத ஆசிரியர்கள் சிடெட் தேர்வு மட்டுமே எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பயிற்சி முடித்துள்ளவர்கள் தமிழக பாடத் திட்டத்தில் படித்தவர்கள். சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. எனவே, குழப்பம் மிகுந்த இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, நடைமுறையில் இருந்த பழைய முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
புதன், 25 மார்ச், 2015
Spl Trs TET: கல்வித்தகுதி தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்ட ஓவிய ஆசிரியர் போட்டித் தேர்வு
AATCHIYAR KANAVU
5:35 PM
TET NEWS
No comments
தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர்.
இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை.
ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும்.
வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.
ஞாயிறு, 22 மார்ச், 2015
PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு
AATCHIYAR KANAVU
8:36 AM
TET NEWS
No comments
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான கலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, இத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல்கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.
மூன்றே மாதங்களில் பணி நியமனம்:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1.90 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வருகிற 28-ஆம் தேதி பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.தேர்வு நடைபெற்ற பிறகு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனத்துக்கும் குறைந்தது6 மாதங்கள் ஆகும். ஆனால், 1,789 ஆசிரியர்கள் 3 மாதங்களில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.


