தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு குரூப்–1 தேர்வு நடத்துகிறது.
இதில் தமிழ்நாட்டில் துணை கலெக்டர் பதவி 3, போலீஸ் டி.எஸ்.பி. பதவி 33, வணிகவரித்துறை இணை கமிஷனர் பதவி 33, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் பதவி 10 ஆகிய 79 காலியிடங்கள் நிரப்ப இன்று குரூப்–1 முதல் நிலை தேர்வு, எழுத்து தேர்வு நடந்தது.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 1.40 லட்சம் பேர் எழுதினர். இதற்காக அமைக்கப்பட்ட 560 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் காயிதே மில்லத் கல்லூரியில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 1 மணி வரை நடந்தது.
தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர் பறக்கும் படை அதிகாரிகள் என 1200–க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
முக்கிய தேர்வு கூடங்கள் வெப்கேமரா மூலம் நேரடியாக தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது. மற்ற தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக