ஆங்கில வழி வகுப்புகளுக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் :
தொடக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்குத் தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.
தொடக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்குத் தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.
இந்த அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாமக்கல் அரசு தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். நாமக்கல் வட்டாரத் தலைவர் சு.சரவணன் வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வில் 25 சதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு முன் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்குத் தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
2001 ஜனவரி 1ஆம் தேதியில் பணி வரன்முறை செய்யப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவியுயர்வு, ஓய்வூதியத்தின் போது அவர்களது தொகுப்பூதிய காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 1200 தொடக்கப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் திட்டத்தைக் கைவிட்டு மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி பள்ளிகளைத் தொடர்ந்து நடத்திட வேண்டும். 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி தமிழக தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி தமிழக முதல்வர், கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோருக்கு ஃபேக்ஸ், மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டப் பொருளாளர் து.ராமராசு, மாவட்டத் துணைத் தலைவர் தனசேகரன், மாவட்டத் துணைச் செயலர்கள் சரவணக்குமார், கருப்பன், வட்டாரச் செயலர் முத்துக்குமார், பிரபு, செந்தில்ராஜன், வசந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:
கருத்துரையிடுக