மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் : 044 - 25676388
E-Mail address :
மாண்புமிகு தமிழக முதல்வர் : cmcell@tn.gov.in
மதிப்பமிகு நிதித்துறை செயலாளர் : finsec@tn.gov.in
மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் : schsec@tn.gov.in
மாதிரிப் படிவம் :
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு!
தமிழக தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிவான வேண்டுகோள் :
கோரிக்கை 1 :
2007 ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியரின் அடிப்படைக் கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு.
2007 ம் ஆண்டுக்கு பின் இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பிற்கே அடிப்படை கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு என நிர்ணயித்த அரசே அதனை மறுப்பதேன்?
இதனடிப்படையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 வது ஊதியக் குழு பரிந்துரைகள் படி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடுக...
கோரிக்கை 2 :
தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறையில் 25 சதவீதம் பதவி உயர்வு இட ஒதுக்கீடு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்களைப் போலவே பதவி உயர்வு வழங்கிடுக.
கோரிக்கை 3 :
2014 ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிடுக.
கோரிக்கை 4 :
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தப்படும் தொகைகள் பற்றிய விபரங்களை உரியவருக்கு மாதந்தோறும் வழங்கிடுக.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கிடுக.
கோரிக்கை 5 :
ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு தனி ஆசிரியர் நியமனம் செய்து கல்வித் தரத்தை உயர்த்திடுக.


0 comments:
கருத்துரையிடுக