( 15,000 ஆசிரியர்களின் வேலை இழப்பைத் தடுத்த போராட்டம் )
1958-ல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை, 80 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் 2-வது ஆசிரியர் என்று அரசு வெள்ளை அறிக்கைப் பிறப்பித்தது.
இது சட்டமன்றத்தில் 8.4.1958-ல் நிறைவேற்றப்படவும் இருந்தது. இதனால் 15,000 ஆசிரியர்கள் வேலை இழக்கயிருந்தனர் .இதனை எதிர்த்து நாமக்கல் இருந்து திரு.வி.இராமசாமி ரெட்டியார் தலைமையிலும், கும்பகோணத்திலிருந்து திரு.இராமையா தலைமையிலும், தென்னார்காட்டிலிருந்து திரு.சி.அப்துல் மஜித் தலைமையிலும் மாநிலம் தழுவிய சைக்கிள் அணிப் பிரச்சாரம் புறப்பட்டன..
இது இயக்க வரலாற்றில் மூன்றாவது சைக்கிள் அணியாகும்.
தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எனப்பலரும் இணைந்த போராட்டமாக இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது..
அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது. இக்கோரிக்கையின் வெற்றியால் ஆசிரியர் இயக்கத்தின் மதிப்பும் உயர்ந்தது.
இதே ஆண்டில் இடைநிலைக் கல்வித் தகுதியுடன், இளநிலையில் பணிபுரிந்த 17,000 ஆசிரியர்களின் ஊதியப் பாதுகாப்பும் , ஆங்கில மொழி கற்பிக்க நியமனம் பெற்ற 20,000 இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பும் கடுமையான போராட்டங்களுக்குப் பின் பாதுகாக்கப்பட்டது..
- இயக்க வரலாறு தொடரும்..

0 comments:
கருத்துரையிடுக