அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள் அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்ததுஏன் அம்மா??????
தாள் 2
அம்மா “தமிழுக்கு அமுதென்று பெயர்” என ஏடுகள் சொல்லுகின்றன… ஆனால் அமுதத்தினை கற்பிக்கும் தமிழாசிரியர்களின் பணியிடக்குறைவினால், தமிழாசிரியார்களின் நிலையோ வேப்பங்காயாக கசக்கிறது…
அம்மா “தமிழுக்கு அமுதென்று பெயர்” என ஏடுகள் சொல்லுகின்றன… ஆனால் அமுதத்தினை கற்பிக்கும் தமிழாசிரியர்களின் பணியிடக்குறைவினால், தமிழாசிரியார்களின் நிலையோ வேப்பங்காயாக கசக்கிறது…
அம்மா அறிவியல் சோதனைகளில் சாதனை படைத்திட்ட அறிவியல் துறை சார்ந்த ஆசிரியர்களின் பணியிடக்குறைவின் வேதனையை தீர்க்க எந்த ஆய்வும் இல்லை…எந்த ஆய்வகமும் இல்லை….உங்களைத் தவிர….
இது போன்று அனைத்து பாடங்களுக்கும் பணியிடக்குறைவு உள்ளது அம்மா. அம்மா எங்களின் கதறல்கள் உங்களின் காதுகளுக்கு வரவில்லையா அம்மா….
தாள் இரண்டுக்கு உள்ள பணியிடக்குறைவினை பணிவாய் எடுத்து வைக்கிறோம் தங்களின் பாதங்களின் அடியில்….கூடுதல் பணியிடம் கொடுத்து பல குடும்பங்களை வாழ வையுங்கள் அம்மா…..
தாள் 1
அம்மா தாள் ஒன்றுக்கு உரிய ஆசிரியர்களின் நிலையினை சொல்ல வார்த்தையில்லை… அம்மா, தனக்கு ஆதரவாக இருந்த தன் கணவனையும் இந்திய இரானுவத்திற்கு தியாக உயிராக கொடுத்து கைம்பெண்னாக கைக்குழந்தையோடு நிற்கும் ஆசிரியை பற்றி சொல்லவா???
அம்மா, ”நான்கு சுவருக்குள் அடைபட்டது நாங்கள் மட்டும் அல்ல எங்களின் கதறல்களும் கூட” என்று ஏங்கும் மாற்றுத்திறனாளியான எங்களுடைய சகோதரனைப்பற்றி சொல்லவா???
அம்மா, எத்தனை பணியிடம்?, என்ன முடிவு?, என்று விடியும்? என தெரியாமல் கதறும் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களின் நிலையினனை சொல்லவா??? அம்மா நினைக்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது……..
அம்மா ஆசிரியராகிய எங்களின் மனநிலை மாற்றம்….ஏமாற்றம்…எங்களின் கதறல்களை சட்டசபையில் எடுத்துரைக்க கூட நாதியற்றவர்களாய் இருக்கிறோம்… நித்தம் நித்தம் மனதில் துக்கம், கண்களில் இல்லை தூக்கம். தொண்டையை அடைக்குது துக்கம், 72000 ஆசிரியரின் மனதும் கலக்கம்…..
தர்மத்தாய்க்கு அடுத்தபடியாக நாங்கள் வணங்கும் தமிழ்த்தாயே!! எங்களின் துயர் நீக்க சட்டசபையில் 110 விதியின் கீழ் கூடுதல் பணியிடம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம், என கண்ணீரோடு முடிக்கிறோம்…

0 comments:
கருத்துரையிடுக