வியாழன், 24 ஜூலை, 2014

பேரியக்கம் பெற்ற பெரு வெற்றி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் இலஞ்ச ஊழலை எதிர்த்து ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த 03.07.2014 அன்று பள்ளிபாளையம் ஒன்றியத்தில் மதிப்புமிகு மாநில துணைச் செயலாளர் முத்துராமசாமி அவர்கள் கண்டன உரை முழங்க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது....
தொடர்ந்து பேரியக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் ஊழல்வாதியின் ஊழல்களை மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இன்று...
இலஞ்ச ஊழலில் திளைத்த பள்ளிபாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கொல்லிமலை ஒன்றியத்திற்கு விரட்டப்பட்டார்...அவர் மேல் விதி எண் 17 ன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது.
இம்மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்து கண்டன உரையாற்றிய மதிப்புமிகு மாநில துணைப் பொதுச்செயலாளர் முத்துராமசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஈரோடு வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட பேரியக்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்டக் கிளை தனது நெஞ்சார்ந்த நன்றியினை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறது...
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்