செவ்வாய், 22 ஜூலை, 2014

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு

நண்பர்களுக்கு வணக்கம்...
தயாராகிக் கொண்டிருக்கிறது
இன்றைய இத்தனை நெருக்கடிகளிலும் நிலைத்து நிற்கும்...
சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்....
சாதனை படைக்கும் அரசுப்பள்ளிகள் குறித்த
அறிவியல் இயக்கத்தின் புத்தகம்....
இன்று பரவலாக அரசுப்பள்ளிகளின் அழிவுநிலை குறித்து
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் விவாத அலை வீசுகிறது..
அரசுப்பள்ளிகளின் அழிவுநிலை வருத்தத்திற்குரியதாக இருந்தாலும்
இப்போதாவது நிகழும் இந்த விவாதப்போக்கு
வரவேற்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக இருக்கிறது...
இந்தப் பேரழிவை உணர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
கடந்த பல ஆண்டுகளாகவே, குறிப்பாகச் சொல்வதானால் 2008 முதல்
அரசுப்பள்ளி மக்கள் பள்ளி, அரசுப்பள்ளி நமது பள்ளி...
அரசுப்பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் தரமான சமமான
கல்வியை வழங்கமுடியும்...
அரசுப்பள்ளிகளில் நமது குழந்தைகளைச் சேர்ப்போம்...
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்... பலப்படுத்துவோம்....
முழுவதும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான
அருகமைப் பொதுப்பள்ளிக்கான கோரிக்கையை முன்னெடுப்போம் வென்றெடுப்போம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து பல்வேறு வடிவங்களில்
பிரச்சார இயக்கங்களை நடத்திவந்தது என்ற வகையில் இன்றைய
விவாதப்போக்கினைத் தூண்டிய அமைப்பாக அறிவியல் இயக்கம்
பெருமைகொள்கிறது...
மேலும் அதன் தொடர்ச்சியாக வருகின்ற நாட்களில்
”அரசுப்பள்ளி மக்கள் பள்ளி : பாதுகாப்போம்... பலப்படுத்துவோம்” என்ற பெயரில்
எம்மோடு இப்பிரச்சார இயக்கத்தில் கருத்தொற்றுமையுடன் செயல்படக்கூடிய
பல்வேறு ஆசிரியர், மாணவர், பெண்கள் அமைப்புகள், தன்னார்வ இயக்கங்கள்
ஆகியவற்றுடன் இணைந்து மாநிலந்தழுவிய கலைப்பயணத்திற்கான
தயாரிப்புகளைச் செய்துவருகின்றது... ஆர்வமுள்ள உங்களைப்போன்ற
பலரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... வரவேற்கிறோம்....
இப்பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக
இன்றைய நெருக்கடியிலும் வெற்றிகரமாக இயங்கக்கூடிய அரசுப்பள்ளிகளை
அடையாளம் கண்டு அவற்றின் புதுமையான முயற்சிகளைத் தொகுத்து
புத்தகமாக வெளிக்கொண்டு வருவதென முடிவுசெய்யப்பட்டுள்ளது....
தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளை, ஆசிரியர்களைக் கொஞ்சம் அறிமுகம் செய்துவைத்து
தொடர்புகொள்ள உதவுங்கள் நண்பர்களே...
அன்புடன் வேண்டுகிறேன்...
தே.சுந்தர்
மாநிலச் செயலாளர் / மாநில ஒருங்கிணைப்பாளர் (கல்வி உபகுழு)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அழைக்க: 94880 11128,
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

1 கருத்து:

  1. தங்கள் முயற்சிகள் தொடரட்டும்..
    வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே..

    பதிலளிநீக்கு

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்