காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரபூர்வ பாடலின் போது இந்திய தேசிய மூவர்ணக்கொடி தலைகீழாகக் காண்பிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

"Let the Games Begin" என்று அந்தப் பாடலுக்குத் தலைப்பிட்டுள்ளனர். இது 'கிளாஸ்ஸ்கோ குழந்தைகள் 2014' யுனிசெஃபின் பாடலும் கூட.

இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்னவெனில் அனைத்து நாட்டு தேசியக் கொடிகளும் இடம்பெறும் பாடலாகும். இதில் இந்திய தேசிய மூவர்ணக்கொடி தலைகீழாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்தது. இந்த முறை 215 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஆட்டம் வண்ணமயமான தொடக்க விழாவுடன் நேற்று தொடங்கியது.