2014 RH LIST :
JUNE - 13, 29
JULY -24
AUGUST -3,8,10,11,29
SEPTEMBER. -7
OCTOBER -4,22,26
NOVEMBER -2,
ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும் 16 ஆயிரம்
பகுதி நேர ஆசிரியரை பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க தமிழக அரசு
முன்வர வேண்டும் என பகுதிநேர சிறப்பாசிரியர்
சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர் சேசுராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த
2011ல் 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
ஓவியம், தையல், உடற்கல்வி என பல பிரிவுகளின் கீழ் வாரத்திற்கு மூன்று நாள்
வேலை, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக
பணிபுரிந்து வருகிறோம். இந்த காலத்தில் 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு
என்ன செய்ய முடியும்?
வருத்தமாக உள்ளது
இது தமிழக அரசுக்கு தெரியாத விஷயம் கிடையாது. ஆனாலும் எங்களின் பிரச்னையை
இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த குறைந்த
சம்பளத்திற்கு ஏராளமான ஆசிரியர் 100 கி.மீ. முதல் 150 கி.மீ. தூரம் வரை
பயணிக்கின்றனர்.
வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகை பஸ் செலவிற்கே போய்விடுகிறது. மீதியுள்ள
சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்ட முடியாமல் அல்லாடி வருகிறோம். தொகுப்பூதிய
அடிப்படையில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தேர்வு
நடத்தி பணிவரன் முறை செய்து தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுபோல் எங்களுக்கும் சிறப்பு தேர்வை நடத்தி முறையான சம்பளத்தில் பணி நியமனம்
செய்ய வேண்டும்.
மற்ற ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நாங்கள்
பணியிட மாறுதலுக்கு வாய்ப்பே இல்லாமல் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில்
பணிபுரிந்து வருகிறோம். பலரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களது
பிரச்னையை தீர்க்க முதல்வர் முன் வர வேண்டும். இவ்வாறு சேசுராஜா தெரிவித்தார்.
///////////////////////////////////////////
அழியும் அபாயத்தில் இந்திய மொழிகள்
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்
லோக்சபாவில் கூறியதாவது:
உலகமயமாக்கலால் பல இந்திய மொழிகள் அழியும்
அபாயத்தில் உள்ளன. பேச்சு வழக்கில் சொந்த மொழிப்பயன்பாடு குறைந்துள்ளதே இதற்கு
காரணம். இதுகுறித்த தகவல்களை பெங்களூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய
ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்தமான் நிக்கோபாரில் பேசப்பட்டு வந்த அகாபோ மொழி பேசிய கடைசி
மனிதனும் இறந்துவிட்டதால், அகாபோ மொழி அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
///////////////////////////////////////////
மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.45 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்
நடப்பு நிதியாண்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சுப்ரமணியன்
தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் பள்ளியில் சேருவதை ஊக்குவிக்க, இடை
நிற்றலை தவிர்க்க, கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களில் மாணவியருக்கு
ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1994 - 95ல் செயல்படுத்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் இத்திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை. ஆண்டுக்கு 90 ஆயிரம்
பேருக்கு 8 கோடி ரூபாய் மட்டும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மூன்றாவது
முறையாக ஜெயலலிதா முதல்வரானதும், இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும்
விரிவுப்படுத்தப்பட்டது.
மூன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை 8ம்
வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் 4.83 லட்சம்
பேருக்கு 42.75 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்தை
செயல்படுத்த 45.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
///////////////////////////////////////////
சதுரங்க போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நடுநிலைப் பள்ளி வரையிலான மாணவ மாணவியருக்கு செஸ் போட்டி நடத்த பள்ளி கல்வி
துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி துறை சார்பில் அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகள், மாநகராட்சி, யூனியன் அளவிலான துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டும்
அதுபோல் மாணவ மாணவியருக்கான செஸ் போட்டி நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை
உத்தரவிட்டுள்ளது.
செஸ் போட்டி 21ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் நடத்தி முடித்து இருக்க
வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர்
பட்டியலில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு
எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வரும் 24ம் தேதி செஸ் போட்டி
நடக்க உள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு காலையிலும், ஆறு
முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு மதியமும் செஸ் போட்டிகள்
நடக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் யூனியன் அளவிலான போட்டியிலும்,
அதன் பின் மாவட்ட அளவிலான போட்டியிலும் பங்கேற்க தகுதி பெறுவர்.
///////////////////////////////////////////
சாலை விழிப்புணர்வு: பள்ளிக் குழந்தைகளுக்காக காமிக் புத்தகம் வெளியிட ஏற்பாடு.
பள்ளிக் குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த
இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி. சார்பில் இலவச காமிக் புத்தகம் வரும் 25ம்
தேதி வெளியிடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சாலை விதிகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தினால்
எதிர்காலத்தில் வெளிநாடுகளைப் போல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை இந்தியாவில்
அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதற்குமான சாலை விதிகளை
வகுத்தளித்துள்ள ஐ.ஆர்.சி. முடிவு செய்துள்ளது. இதற்காக சாலை பாதுகாப்பு
விதிகள் விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல் 14
வயதுள்ள குழந்தைகளுக்கு இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம் 25ம்
தேதி சி.ஐ.டி. நகர், சென்னை மாநகராட்சிப் பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு
விழா நடக்கிறது. ஐ.ஆர்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், "குழந்தைகள் மனதில்
எளிதாக பதியும் வகையில் மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன்
கதாபாத்திரங்கள் மூலம் காமிக்ஸ் வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது
என்றார்.
///////////////////////////////////////////
"அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது" - -
கல்வியாளர்கள் காட்டம்.
அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது. அதனால்,
கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக இருந்தது,
தற்போது, 14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள், காட்டமாக
தெரிவித்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வித் துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட,
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது.உண்மையில், இந்த
நிதியில், பெரும்பகுதி, அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத
பணியாளர்களுக்கு, சம்பளமாக போய்விடுகிறது. 2011 12 கால கட்டத்தில், கல்வித்
துறை ஊழியர்களுக்கான ஒரு நாள் சம்பளம், 25 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30
கோடி ரூபாயை தாண்டி இருக்கலாம்.சமீபத்தில், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில், திட்டப் பணிகளுக்கு என,
3,290.60 கோடி ரூபாய் செலவிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில்,
பெரிய அளவிற்கு, எந்த திட்டமும் நிறைவேற்ற வாய்ப்பில்லை எனவும், இந்த நிதி
முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14
வகையான இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கே, சரியாகிவிடும் எனவும், கல்வித்துறை
வட்டாரம் தெரிவிக்கிறது.அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை
வலுப்படுத்தும் வகையிலான திட்டங்கள், அறிவிப்பில் இடம்பெறவில்லை. இந்த
விவகாரம் குறித்து, கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது:கல்வி மற்றும் மருத்துவ
துறைக்கான நிதி ஒதுக்கீடு, பெருமளவு குறைந்து விட்டது. கடந்த, 40 ஆண்டுகளாகவே,
இந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து வருகிறது. காமராஜர்
ஆட்சி காலத்தில், கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த
பட்ஜெட்டில், 35 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது. அப்போது, மொத்த பட்ஜெட்டே,
100 கோடி ரூபாய்க்குள் தான் இருக்கும்.இப்போது, கல்வி துறைக்கான
நிதிஒதுக்கீடு, 14.6 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. அதுவும்,
எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடைநிலை
கல்வி திட்டம்) நிதியும், இந்த சதவீதத்திற்குள் அடக்கம். தமிழக அரசின் நிதி
என்று பார்த்தால், மிகவும் குறைவு தான்.பெரும்பகுதி நிதியை, இலவச
திட்டங்களுக்காக திருப்பி விடுகின்றனர். பின், கல்விக்கு, எங்கே நிதி
ஒதுக்கீடு செய்வர்? அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில், தமிழக
அரசுக்கு, அக்கறை இல்லை.அரசு பள்ளிகளில், முதலில், காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். ஒரு ஆண்டிற்கு, எத்தனை ஆசிரியர்
பணியிடங்கள், ஓய்வின் காரணமாக காலியாகிறதோ, அந்த பணியிடங்கள் முழுவதையும்
நிரப்புவதில்லை. பாதி அளவிற்குத் தான் நிரப்புகின்றனர்.அதிலும், அறிவிப்பில்,
பல இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவர். பதவி உயர்வினால் ஏற்படும்
காலி பணியிடங்களையும், சரிவர நிரப்புவது இல்லை.தேவைக்கு ஏற்ப, ஆசிரியர்களை
நியமித்தால், அதிகம் நிதி செலவழிக்க வேண்டி வரும். இதர செலவுகளும்
அதிகரிக்கும். அதனால் தான், அரசுக்கு அக்கறை இல்லை.50 ஆயிரம், 70 ஆயிரம்
ஆசிரியர் நியமனம் செய்துவிட்டதாக கூறுவது எல்லாம், உண்மை கிடையாது. இப்போதும்,
அரசு பள்ளிகளில், ஆசிரியர் தேவை, அதிகமாக உள்ளது.இவ்வாறு, ராஜகோபாலன்
தெரிவித்தார்.
கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை:
உள் கட்டமைப்பை வசதி குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: அடிப்படை
வசதிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு,
அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றாலும், மத்திய அரசு நிதி உதவி
மற்றும் 'நபார்டு' வங்கி நிதி உதவி மூலம், பல்வேறு வளர்ச்சிப் பணிகள், ஒவ்வொரு
ஆண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும், பல வளர்ச்சிப் பணிகள்,
படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
///////////////////////////////////////////
மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள
ஆசிரியர்கள் நியமன விபரம் ...
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில்
வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள
ஆசிரியர்கள் நியமன விபரம் ...
SG T =938
BT= 13,777
PG T=2881
SPECIAL T =842
LECTURER =1093
So the vacancy will be increase around 3000 in BT assistant
///////////////////////////////////////////
தொடக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை -- மத்திய மனிதவள அமைச்சர்
ஸ்மிருதி இரானி
தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின்
நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று
மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தொடக்கப்பள்ளி அளவில், பழங்குடியின குழந்தைகளின்
வருகை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலைத்தரும் விஷயமாக உள்ளது.
துவக்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. அதன்பொருட்டு, துவக்கப் பள்ளிகளில், சிறப்பான குடிநீர் மற்றும்
கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகளை தெரிவிக்கும்படி, அனைத்து மாநில
முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப்
பாடத்திட்டத்தில், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்தும் வகையிலான ஒரு அம்சத்தை
அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
--

0 comments:
கருத்துரையிடுக