NVIDIA Shield டேப்லட் விரைவில் அறிமுகம்
NVIDIA Shield எனும் புத்தம் புதிய டேப்லட் ஆனது எதிர்வரும் 29ம் திகதி அளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 அங்கல அளவுடையதும், 1920 x 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் Tegra K1 Processor, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இரு பதிப்பாக வெளிவரவுள்ள இந்த டேப்லட்டின் ஒரு வகையில் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இதன் விலை 399 டொலர்கள் ஆகும்.
மற்றையதில் WiFi தொழில்நுட்பம் உள்ளடக்கப்படவில்லை. இதன் விலை 299 டொலர்கள் ஆகும்.

0 comments:
கருத்துரையிடுக