திங்கள், 21 ஜூலை, 2014

இனி உங்கள் கம்ப்யூட்டரின் சாதாரண திரையையும் தொடு திரையாக(Touch Screen) மாற்றலாம்!

இனி உங்கள் கம்ப்யூட்டரின் சாதாரண திரையையும் தொடு திரையாக(Touch Screen) மாற்றலாம்!

Handmateசாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.
Handmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது. லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.
இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் மிக எளிது. இமெயில் படிக்கவும், வலைத்தளங்களைப் பார்க்கவும், படங்களை (pictures )ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்வது போன்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கு இந்த Touch Pen பயன்படுகிறது.
வேர்ப் ப்ராச்சர் செயல்களில் Highlight மற்றும் annotate செய்வதற்கும் இதை பயன்படுத்த முடியும்.மேலும் இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களையும் செயல்படுத்த முடியும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்