வெள்ளி, 30 ஜனவரி, 2015

பிளஸ் 2 தேர்வு: சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு:
சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ் தனித்
தேர்வர்கள்
விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத்
தேர்வுக்கு சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள்
பிப்ரவரி 5 முதல் 7-ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்ககம்
வியாழக்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
பிளஸ் 2 பொதுத்
தேர்வுக்கு தேர்வுத் துறையால்
அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள்
விண்ணப்பிக்கத் தவறி,
தற்போது விண்ணப்பிக்க
விரும்பும் தனித்
தேர்வர்களிடமிருந்து இணையதளம்
மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வர்கள் இணையதளம் மூலம்
விண்ணப்பிப்பதற்காக
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
அரசுத் தேர்வுகள் இயக்கக
சேவை மையம்
அமைக்கப்பட்டுள்ளது.
தனித் தேர்வர்கள் தாங்கள் எந்த
கல்வி மாவட்டத்திலிருந்து
விண்ணப்பிக்கிறார்களோ, அந்த
மாவட்டத்தில் உள்ள இந்த
சேவை மையத்துக்கு நேரில்
சென்று பிப்ரவரி 5 முதல் 7
வரை இணையதளம் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த சேவை மையங்களின்
விவரங்களை www.tndge.in என்ற
இணையதளத்தில்
அறிந்துகொள்ளலாம். தேர்வுக்
கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக்
கட்டணமாக ரூ.1,000 செலுத்த
வேண்டும்.
தனித் தேர்வர்கள் தங்களுடைய பிளஸ்
2 மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளித்
தலைமை ஆசிரியரிடமிருந்து
பெற்ற தகுதிச் சான்றிதழ்,
செய்முறை மதிப்பெண்களுக்கான
ஆவணம் ஆகியவற்றுடன் இந்த
சேவை மையங்களுக்கு வர
வேண்டும்.
நேரடி தனித் தேர்வர்கள்
தங்களுடைய பத்தாம்
வகுப்பு அல்லது அதற்கு சமமான
தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான
அசல் மதிப்பெண் சான்றிதழ்,
பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல்,
இடப்பெயர்வு சான்றிதழ் அசல்
(வெளி மாநிலத்
தேர்வர்களுக்கு மட்டும்)
ஆகியவற்றுடன்
சேவை மையங்களுக்கு வர
வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்