திருச்சியில் இன்று (31/01/2015) நடைபெற்ற தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம்...
திருச்சியில் இன்று (31/01/2015) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வுக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் சார்பாக அ இ அ தி மு க அரசிற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதனை அடுத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் இதுகுறித்துப் பேசியபோது, இந்த அரசு ஒருபோதும் பகுதிநேர ஆசிரியர்களைக் கைவிடாது. பணிப்பாதுகாப்பு படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதியளித்தனர்.
பின்னர், முக்கியமாக பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நிலுவைத் தொகையானது அடுத்தமாதம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
மேலும், வரும் பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் அனைத்திந்திய அளவில் மத்திய மற்றும் மாநில கல்வித்துறை அதிகாரிகள் பங்குபெறும் முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது. அதில் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணிநிரந்தரம் மற்றும் பணிவரையறை குறித்துப் பேசி தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
பொன். சங்கர்,
மாநில செய்தித் தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
மாநில செய்தித் தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்




