தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்களை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:
1. திருவள்ளுவர் விருது : திருக்குறள் க. பாஸ்கரன்
2. தந்தை பெரியார் விருது : டாக்டர் தாவூஜீ குப்தா
3. அண்ணல் அம்பேத்கர் விருது : ஆழி.கு. மகாலிங்கம்
4. பேரறிஞர் அண்ணா விருது : பேராசிரியர் கஸ்தூரி ராஜா
5. பெருந்தலைவர் காமராசர் விருது : கருமுத்து தி. கண்ணன்
6. மகாகவி பாரதியார் விருது : முனைவர் இளசை சுந்தரம்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது : கவிஞர் கண்மதியன்
8. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது : முனைவர் கரு. நாகராசன்
9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது : பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்
மேற்காணும் விருதுகளை 16.01.2015 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
