பட்டாக்குறிச்சி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் SMC VEC உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.அனைவரையும் பள்ளித்தலைமையாசிரியர் திரு.R.செல்வராசு அவர்கள் வரவேற்று விழாவை தொடங்கிவைத்தார்கள்.தேசியக்கொடியை தலைவர் திரு.A.பெரியசாமி அவர்கள் ஏற்றியவுடன் கொடிப்பாடல் இசைக்கப்பட்டது.மேலும் பள்ளியின் உதவிஆசிரியர்கள் உதவியுடன் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் பேச்சுப்போட்டி பாடல் நடனம் மாறுவேடப்போட்டிகள் போன்றவை இடம்பெற்றன.பின்னர் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.இராஜேஸ்வரி அவர்களும்,தலைவர் திரு.A.பெரியசாமி அவர்களும் இணைந்து மாணவர்களுக்கு தேர்வுஅட்டையினையும்,பேனா இனிப்புகள் போன்றவற்றை வழங்கி சிறப்பித்தார்கள்.பின்னர் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.இறுதியாக நாட்டுப்பண் பாடப்பட்டு விழா இனிதே முடிவடைந்தது.
திங்கள், 26 ஜனவரி, 2015
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.



