வியாழன், 29 ஜனவரி, 2015

TNPSC: நிகழாண்டு போட்டித் தேர்வு அட்டவணை நாளை வெளியாகும்

TNPSC: நிகழாண்டு போட்டித் தேர்வு அட்டவணை நாளை வெளியாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நிகழாண்டு போட்டித்
தேர்வுகளுக்கான கால அட்டவணை பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜன.30) வெளியிடப்படும்
என்று அதன் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற கிராம
நிர்வாக அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம்,
மூன்று பேருக்கு பணியிட ஆணைகளை வழங்கி கலந்தாய்வைத் தொடங்கி வைத்தார். இந்தக்
கலந்தாய்வு பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2 ஆயிரத்து 234 பணியிடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், 239
சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒரு நாளைக்கு 200
பேர் வீதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையத்
தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நிகழாண்டுக்கான போட்டித் தேர்வுகள் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜன.30)
வெளியிடப்படும். இதில், கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்த
விவரங்கள் வெளியாகும்.
குருப் 1 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். குரூப் 2 தேர்வு முடிவுகள்
இன்னும் 2 வாரத்தில் வெளியிடப்படும். 444 உதவி வேளாண் அலுவலர்
பணியிடங்களுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும்.
இரண்டாண்டு வேளாண் பட்டயப் படிப்பு படித்தவர்கள் இந்தப்
பணிக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.
வேதியியல் குறித்த 100 பணியிடங்களுக்கான தேர்வு குறித்தும் விரைவில்
அறிவிக்கை வெளியாகும். குரூப் 1 தேர்வில் 50 பணியிடங்களுக்கான
தேர்வு குறித்து நான்காவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்