அரசு தேர்வில் 100
மதிப்பெண் எடுத்த
மாணவர்களுக்கு ரொக்கப்
பரிசு வழங்கிய அரசுப்
பள்ளி ஆசிரியர-- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான்
கற்றுக் கொடுத்த சமூகவியல்
பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5
மாணவர்களுக்கு தலா ரூ.1000
வழங்கி கௌரவித்தார் அரசுப்
பள்ளி ஆசிரியர் முருகன்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகே உள்ளூர்பட்டியில்
அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப் பள்ளி நடப்பு ஆண்டுதான்
மேல்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது. இப் பள்ளியில் கடந்த
ஆண்டு சமூகவியல்
பட்டதாரி ஆசிரியராக முருகன்
பணி புரிந்தார். தற்போது இவர்
பதவி உயர்வு பெற்ற
முதுகலை ஆசிரியராக
பந்தல்குடி அரசு மேல்நிலைப்
பள்ளியில்
பணிபுரிந்து வருகிறார்.
கிராமத்தில் தான் 2013-14-ம்
கல்வியாண்டில் கற்றுக் கொடுத்த
மாணவர்கள் சிவக்குமார்,
சிவசுப்பிரமணியன்,
காளீஸ்வரபாண்டியன், நித்யா,
சொர்ணலட்சுமி ஆகிய 5 பேர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில்
சமூகவியல் பாடத்தில் 100-க்கு 100
எடுத்ததையடுத்து அவர்களை கௌரவிக்க
நினைத்த ஆசிரியர் முருகன் தான்
பதவி உயர்வில் சென்றாலும், மீண்டும்
பள்ளிக்கு வந்து பள்ளியில்
நடைபெற்ற விழாவில் மாணவர்கள் 5
பேருக்கும் தலா ரூ.1000
வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியரின் இந்தச்
செயலை தலைமை ஆசிரியை ஜெயா கிறிஸ்டிபாய்,
மல்லி ஊராட்சி மன்றத்
தலைவி முத்தம்மாள், பெற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர்
ராஜேந்திரன் ஆகியோர் வெகுவாக
பாராட்டினர்.
பொதுவாக ஆசிரியர்கள் தாங்கள்
நிரந்தரமாக பணிபுரியும்
பள்ளியில் கூட இதுபோல
செய்வது கிடையாது. ஆசிரியர்
முருகன் மாறுதலாகிப்
போனாலும் மாணவர்கள்
மீது கொண்ட பற்றுதலால்
இதுபோன்ற ஊக்கத்தைக்
கொடுத்து ஆசிரியர்
சமுதாயத்திற்கு முன்னோடியாக
திகழ்கிறார் என்று மாவட்ட
கல்வி அலுவலர் விஷ்ணுதாஷ்
ஆசிரியரைப் பாராட்டினார்.
மதிப்பெண் எடுத்த
மாணவர்களுக்கு ரொக்கப்
பரிசு வழங்கிய அரசுப்
பள்ளி ஆசிரியர-- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான்
கற்றுக் கொடுத்த சமூகவியல்
பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5
மாணவர்களுக்கு தலா ரூ.1000
வழங்கி கௌரவித்தார் அரசுப்
பள்ளி ஆசிரியர் முருகன்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகே உள்ளூர்பட்டியில்
அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப் பள்ளி நடப்பு ஆண்டுதான்
மேல்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டது. இப் பள்ளியில் கடந்த
ஆண்டு சமூகவியல்
பட்டதாரி ஆசிரியராக முருகன்
பணி புரிந்தார். தற்போது இவர்
பதவி உயர்வு பெற்ற
முதுகலை ஆசிரியராக
பந்தல்குடி அரசு மேல்நிலைப்
பள்ளியில்
பணிபுரிந்து வருகிறார்.
கிராமத்தில் தான் 2013-14-ம்
கல்வியாண்டில் கற்றுக் கொடுத்த
மாணவர்கள் சிவக்குமார்,
சிவசுப்பிரமணியன்,
காளீஸ்வரபாண்டியன், நித்யா,
சொர்ணலட்சுமி ஆகிய 5 பேர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில்
சமூகவியல் பாடத்தில் 100-க்கு 100
எடுத்ததையடுத்து அவர்களை கௌரவிக்க
நினைத்த ஆசிரியர் முருகன் தான்
பதவி உயர்வில் சென்றாலும், மீண்டும்
பள்ளிக்கு வந்து பள்ளியில்
நடைபெற்ற விழாவில் மாணவர்கள் 5
பேருக்கும் தலா ரூ.1000
வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியரின் இந்தச்
செயலை தலைமை ஆசிரியை ஜெயா கிறிஸ்டிபாய்,
மல்லி ஊராட்சி மன்றத்
தலைவி முத்தம்மாள், பெற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர்
ராஜேந்திரன் ஆகியோர் வெகுவாக
பாராட்டினர்.
பொதுவாக ஆசிரியர்கள் தாங்கள்
நிரந்தரமாக பணிபுரியும்
பள்ளியில் கூட இதுபோல
செய்வது கிடையாது. ஆசிரியர்
முருகன் மாறுதலாகிப்
போனாலும் மாணவர்கள்
மீது கொண்ட பற்றுதலால்
இதுபோன்ற ஊக்கத்தைக்
கொடுத்து ஆசிரியர்
சமுதாயத்திற்கு முன்னோடியாக
திகழ்கிறார் என்று மாவட்ட
கல்வி அலுவலர் விஷ்ணுதாஷ்
ஆசிரியரைப் பாராட்டினார்.


0 comments:
கருத்துரையிடுக