10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட இணைய தளத்தில் ‘‘SSLC EXAM MARCH 2015 PRIVATE CANDIDATE HALL TICKET PRINTOUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0 comments:
கருத்துரையிடுக