தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி
2013-2014-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 26.08.2014 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.
மேற்காணும் பதவிகக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.11.2014 மற்றும் 02.11.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டும், நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு 590 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 04.03.2015 முதல் 06.03.2015 வரை மற்றும் 09.03.2015 முதல் 11.03.2015 வரை சென்னை பிரேஸர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்புக்கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். மேற்படி அழைப்புக்கடிதம் அனைத்து 590 விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது
மேற்கண்டவாறு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் அதனை தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

0 comments:
கருத்துரையிடுக