நீதித்துறையில் நேரடி பணி நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு-கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு நேர்முகத் தேர்வு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
காலியாக உள்ள 8 சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, தட்டச்சில் முதுநிலை, சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பிரிவில் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 கணினி இயக்குநர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் பட்டப்படிப்புடன் கணினியில் சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
1 ஓட்டுநர் பணியிடத்துக்கு 7-ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் இருக்க வேண்டும். 2 நகல் பரிசோதகர் பணியிடத்துக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு ங்ஸ்ரீர்ன்ழ்ற்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்ற்ய்ஸ்ரீன்க்க்ஹப்ர்ழ்ங் என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு அனைத்தும் மேற்கண்ட இணையதளத்திலேயே வெளியிடப்படும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 21-ம் தேதியாகும். விண்ணப்பங்களை முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக