தஞ்சாவூர்:தஞ்சையில் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான உடற்திறனாய்வு விளையாட்டு போட்டிகள் நடந்தது.அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி துவக்கி வைத்தார். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், தஞ்சை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 700 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். மண்டல அளவிலான உடற்தகுதி விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இது போல், கும்பகோணத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளில், ஆயிரம் மாணவர்களும், பட்டுக்கோட்டையில் நடந்த விளையாட்டு போட்டிகளில், 1,124 மாணவர்களும் பங்கேற்று விளையாடினர்.
திங்கள், 2 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக