10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கையேடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது. அந்த கையேட்டில், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் அறைக்கு தேர்வு அலுவலர்கள் அனைவரின் செல்போன்களும் சுவிட்ஆப் செய்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு மட்டும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் அலுவலக அறையில் செல்போனை பயன்படுத்தலாம் என்று கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்வு அலுவலர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை

0 comments:
கருத்துரையிடுக