ஆசிரியர் பயிற்றுநர் சங்கம்
வலியுறுத்தல்- திண்டுக்கல்:ஆசிரியர்
பயிற்றுநர்
காலிப்பணியிடங்களை நிரப்ப
அனைத்து வளமைய
பட்டதாரி ஆசிரியர்கள்
முன்னேற்ற சங்கம்
வலியுறுத்தியுள்ளது.திண்டுக்கல்லில்
மாநில பொதுக்குழு கூட்டம்
நடந்தது. மாநில
பொதுச்செயலாளர் ராஜ்குமார்
கூறியதாவது: தமிழகம்
முழுதும் 4,500
பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்
பயிற்றுநர்களாக
பணிபுரிகிறோம். கடந்த
மூன்று மாதங்களுக்கு முன்,
மதுரை ஐகோர்ட் கிளை, 855
பேரை பள்ளி ஆசிரியர்களாக
அனுப்ப உத்தரவிட்டது.
அதை அரசு அமல்படுத்தவில்லை.ஆண்டுதோறும்
500 பேரை உயர்நிலைப்பள்ளிகள்,
மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக
அனுப்ப வேண்டும், என 2006
அரசாணையில் உள்ளது.
இதை அமல்படுத்த
அரசு மறுக்கிறது. ஜூன் 2014ல்
கட்டாய பணிமாறுதல் மூலம்
வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட
ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல்
கலந்தாய்வில்
முன்னுரிமை வழங்க வேண்டும்.
காலிபணியிடங்களை நிரப்பும்போது,
பணிபுரிகின்ற ஆசிரியர்
பயிற்றுநர்களின்
பொது மாறுதல்
கலந்தாய்வு நடத்திய பிறகே,
புதிய
காலிப்பணியிடங்களுக்கான
கலந்தாய்வை நடத்த வேண்டும்,
என்றார்.

0 comments:
கருத்துரையிடுக