மத்திய அரசின் கனவுத்திட்டமான ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகளில் மொபைல் பேங்கிங் வசதியை பெற டிஜிட்டல் ஐடென்டிட்டியாக ஆதார் கார்டை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18-வது தேசிய மின் ஆளுமை மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில்
நடந்தது. அதில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் செயலாளர் ஆர்.எஸ்.சர்மா பேசும் போது,”டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த டிஜிட்டல் யுகத்தில் ஐடென்டிட்டி மிக முக்கியமானது. நாம் ஆதார் எண்ணை டிஜிட்டல் ஐடென்டிட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதை நாம் மொபைல் நம்பருடன் இணைத்துவிட்டால் மொபைல் போன் வழியாக பாதுகாப்பாக வங்கி பரிவர்த்தனை செய்ய முடியும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தூண்களே ஆதார் எண்ணும், மொபைல் எண்ணும், வங்கி கணக்கு எண்ணும்தான். மக்கள் மொபைல் போன் வழியாக வங்கிச் சேவையை எளிதாக பெற இந்த மூன்றையும் ஒன்றிணைத்து விடுவோம். இவ்வாறு செய்வதால் கிராமத்தில் உள்ளவர்களும் கூட நகரத்தை நோக்கி வரவேண்டியதில்லை. வீட்டில் மொபைலில் இருந்தே பண பரிவர்த்தனை செய்யலாம். இந்த புதிய முயற்சி எதிர்காலத்தில் இந்தியாவையே மாற்றும். “என்று அவர் தெரிவித்தார்