ஆசிரியர் நலன் காக்க மீண்டும் ஒன்றுபட்டுள்ள தலைவர்களுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் நலனோடு நமது எதிர்கால ஆசிரியர் நலன்களையும், அரசுப் பள்ளிகளின் நலன்களையும் காக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுங்கள். அரசுப்பள்ளிகள்ஏழைக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளாக மாறிவிட்டன. ஊரில் இருக்கும் பத்துப் பதினைந்து ஏழைக் குடும்பங்களை நம்பித்தான் அரசுப் பள்ளிகள் இயங்கும் நிலை. இவர்களும் இல்லாமல் போனதால் தான் ஆண்டுக்கு ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை மூடவேண்டியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் வெறும் 50 க்கும் குறைவான மாணவர்களோடு செயல்படுகின்றன. அரசுப் பள்ளிகள் வசதி படைத்தவர்களால் தீண்டப்படாத பள்ளிகளாக மாறிவிட்டன. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளும் தனியார் பள்ளிக்குச் செல்லும் நிலை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். அனைத்துக் பெற்றோர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிக்கு விருப்பத்தோடு வரும் நிலையை உருவாக்க ஆசிரியர் சமுதாயம் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை. அரசுப் பள்ளி ஆசிரியரின் குழந்தைகளை தொடக்கப் பள்ளி வரையிலாவது அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க முயற்சி எடுத்தாலே அரசுப் பள்ளிகளின் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும். அப்பொழுதுதான் மற்றவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்த முடியும். அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் களைய ஆசிரியர்களே போராடும் நிலை ஏற்படும். அரசுப் பள்ளிகள் புத்துணர்ச்சி பெறும். தனியார் பள்ளிகளில் எந்தப் பெற்றோரும் விரும்பி கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் உள்ள சிறிய குறைபாடுகளும், தவறான கருத்துகளும் மட்டுமே மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் இயக்கங்கள் நினைத்தால் இந்த நிலைகளை மாற்ற முடியும். அனைத்துக் குழந்தைகளும் கட்டணமில்லாமல் தரமான கல்வியைப் பெற முடியும்.
சனி, 14 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக