முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்
சரிபார்ப்பு திங்கள்கிழமை
தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும்
தொடர்ந்து சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும்
மூன்று மண்டலங்களாகப்
பிரித்து விழுப்புரம், சேலம்,
மதுரை ஆகிய இடங்களில்
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் உள்ள
அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளியிலும், சேலத்தில் உள்ள
சாரதா வித்யாமந்திர் மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியிலும்,
மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்.
மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும்
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெற்றது.
முதல் நாள் நடைபெற்ற
சான்றிதழ் சரிபார்ப்பில் 800-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களைத்
தேர்வு செய்வதற்கான போட்டித்
தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம்
தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை 1 லட்சத்து 90
ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள்
பிப்ரவரி 6-ஆம்
தேதி வெளியிடப்பட்டன.
தேர்வர்கள் 1:1 என்ற விகிதத்தில்
சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக