வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இந்திய கல்வி முறையே சிறந்தது’


நமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதே இந்திய கல்விமுறையை பின்பற்றி படித்த நம் இந்திய விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றவர்கள் தான்.

இந்தியர்கள் உழைப்பாளிகள்

மேலை நாடுகள், இந்தியா கல்வி நிறுவனங்களில் படித்த திறன் மிக்க மாணவர்களை அதிகளவில் பணியில் அமர்த்திக்கொள்ள முன்வருகின்றன. இந்திய மாணவர்களும் சிறந்த வாய்ப்புகளுக்காக அங்கே செல்கின்றனர்.

இந்தியர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்திக்கொள்ள அவர்கள் விரும்புவதற்கு, நம் மக்கள் சிறந்த உழைப்பாளிகள் என்பதும் ஒரு காரணம். சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வில் விடுமுறை நாட்கள் பாராது நமது மக்கள் அதிகளவில் உழைக்கின்றனர். மேலை நாட்டு மக்களோ ஓய்விலும், பொழுதுபோக்கிலும் அதிக நேரம் செலவிடக்கூடியவர்கள்.

அமெரிக்காவை விட இந்தியாவில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவை நமது மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. போட்டிகள் அதிகம் என்பதால் அனைவருக்கும் சிறந்த வேலைவாய்ப்புகள் வழங்குவது கடினம். இந்திய பட்டதாரிகள் வேலைவாய்ப்பை மட்டுமே எதிர்நோக்காமல், சுயதொழில் செய்ய அதிகமானோர் முன்வர வேண்டும்.

சிறந்த கலாச்சாரம்

இந்தியர்கள் வேலைக்காக அயல்நாடுகளுக்கு சென்றாலும், அவர்கள் தங்களது குழந்தைகளை இந்தியாவிலேயே படிக்க வைக்க விரும்புகின்றனர். மாணவர்களிடையே அங்கு உள்ள துப்பாக்கி கலாச்சாரம் இங்கு இல்லை. இந்திய கலாச்சாராத்தையும், கல்வி சூழலையும் அதிகம் நேசிக்கின்றனர். இந்தியாவில் அதிகளவிலான சர்வதேச பள்ளிகள் உருவாவதற்கு முக்கிய காரணமும் இது தான். பள்ளி மற்றும் உயர்கல்வியில் இந்தியா சிறப்பாகவே உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் வேண்டுமானால் மேலை நாடுகள் நம்மைவிட சிறந்து விளங்கலாம்.

நன்கொடை இல்லை

சமச்சீர் கல்வி முறையைப் பொருத்தவரை, மெதுவாக படிக்கும் திறன் கொண்டவர்களுக்கே அதிக பயன்தரும். பலதரப்பட்ட மக்கள் உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும். அதன் ஒரு முயற்சியாக பிரின்ஸ் கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு, அவற்றின் எதிலும் நன்கொடை பெறுவது இல்லை. சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்