வியாழன், 12 பிப்ரவரி, 2015

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா அவர்களின் கவனத்திற்கு:

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா அவர்களின் கவனத்திற்கு:சில மாவட்டங்களில் உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு கூட்டம் நடக்கும்பொழுது நடுநிலைப்பள்ளிகள் வேலை நாளாக செயல்படுகின்றன.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிரமம் இல்லை.ஆனால் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிற்சியில் இருப்பர்.பெரும்பாலும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டு இடைநிலை ஆசிரியர்கள்தான் பணியில் இருப்பர்.சிலபள்ளிகளில் ஒரு இடைநிலை ஆசிரியர்தான் இருப்பர்.இரண்டு இடைநிலை ஆசிரியர்கள் எப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பித்தல் பணியை செய்ய முடியும்.அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையையும் மனுஉளைச்சலையும் அல்லவா ஏற்படுத்தும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?இடைநிலை ஆசிரியர்கள் என்றால் கிள்ளுக்கீரைகளா?உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தாய்வுக்கூட்டம் நடக்கும்பொழுது ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவியுங்கள் அல்லது அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவியுங்கள்.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கருத்தாய்வு நடைபெறும் தினத்தன்று மட்டும் தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதேன்.இடைநிலை ஆசிரியர்களின் கையாலாகாத நிலமையை அனைவரும் பாரீர்!!!பாரீர்!!!
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்