புதன், 11 பிப்ரவரி, 2015

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு எஸ்.எஸ்.
எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணைய வணிக பயிற்சி

இது தொடர்பாக கோவை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் எஸ்.அழகிரிசாமி வெளியிட்டு உள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இணைய வணிக பயிற்சி (இ-காமர்ஸ் இன்டக்ஷன் டிரெயினிங்) அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண் ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 4 வாரங்கள். முதல் வாரம் கோவை வகுப்பறையில் பயிற்சி அளித்து, கடைசி 3 வாரங்கள் தனியார் நிறுவனத்தில் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஊதியம் வழங்கப்படும்

பணியில் சேருபவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் செலவினம் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள். பயிற்சி குறித்த விவரங்கள் தேவைப்படுவோர் துணை இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்