ஆசிரியர் சமுதாயமே இந்த அவலநிலையைக் கேளிர்
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் நாற்பது ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.மங்களூர் ஆசிரியர் நாணய கூட்டுறவு சங்கத்தால் ஆசிரியர்கள் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடுகின்றனர்.வெளிமாவட்ட ஆசிரியர்கள் அவர்களுக்குள் ஜாமின் கையொப்பமிட்டு பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை வாங்க மறுக்கின்றனர்.அந்த ஒன்றியத்தில் நிரந்தரமாக வசிக்கும் ஆசிரியரின் கையொப்பம் விண்ணப்பத்தில் இடம் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர் .இதனால் அந்த ஆசிரியர்கள் கடன்பெற முடியாத சூழல் நிலவுகிறது.இந்தப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்

0 comments:
கருத்துரையிடுக