செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறும் நடமாடும் உளவியல் மைய நிபுணர்கள்

பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 32 மாவட்டங்கள், 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று பெண்கள், ஏழு ஆண் உளவியல் நிபுணர்கள் உள்ளனர். ஒரு மண்டலத்தில் குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களும், அதிகபட்சமாக நான்கு மாவட்டங்களும் அடங்கியுள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தோல்வியை எதிர்கொள்ளுதல், தேர்வு பயம், உணவு உட்கொள்ளுதல், நேர மதிப்பீடு, மனதை ஒரு நிலைபடுத்துதல், கடினமான கேள்விகளை புரிந்து படித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும், ஆலேசானைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய மாவட்டங்களில், 1000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கல்வியாண்டிற்கு மொத்தம் 200 வேலைநாட்களே உள்ள நிலையில், 1000 பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அதிலும், தேர்வு, பள்ளி விழாக் காலங்களில் இப்பணிகள் நிறுத்திவைக்கப்படும். மிகவும் குறைந்த நாட்களில், அதிகமான பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருப்பதால், மண்டல உளவியல் நிபுணர்கள் திணறி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தற்போது, திருப்பூர், ஊட்டி பகுதிகளில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் சென்றுள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து, அவசர அழைப்புகள் சென்றாலும், அம்மாவட்டங்களில் பணிகள் முடிந்த பின்பே வர இயலும். பணி சுமைகளுக்கு மத்தியில், தமிழகம் முழுவதும் மண்டல உளவியல் நிபுணர்கள் திணறி வருகின்னர். மாவட்டந்தோறும், ஒரு நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து, இரண்டு உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இன்றைய சூழலில், மாணவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஆசிரியர் தெரிவித்தார். கல்வித்துறை இணை இயக்குனர் மற்றும் நடமாடும் உளவியல் மையங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் உஷாராணி கூறுகையில், "மாவட்டந்தோறும், நடமாடும் உளவியல் மையம் அமைக்கப்படலாம். இதுகுறித்து, அரசு மட்டுமே முடிவுசெய்ய இயலும்" என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்