நாளொரு திருக்குறள் நாமறிவோம்
பேராசிரியர் எ. முத்துக்கிருஷ்ணன்
திருக்குறள் -161/1330, THIRUKKURAL - 161/1330
அறம்: இல்லறவியல் (DOMESTIC VIRTUE)
அதிகாரம் 17. அழுக்காறாமை (Not Envying)
மூலக்குறள்
161. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.
எளிமை
ஒழுக்காறாக் கொள்க, ஒருவன்தன் நெஞ்சத்து,
அழுக்காறு இல்லாத இயல்பு.
.சொற்பொருள்: ஒழுக்காறா - வாழும் நெறியாக; கொள்க - அடைக; ஒருவன் - ஒருத்தன்; தன் - தன்னுடைய ; நெஞ்சத்து - உள்ளத்தில் ; அழுக்காறு - பொறாமை ;. இல்லாத - உண்டாகாத;
இயல்பு - குணம்/தன்மை.
பொருள்: ஒருவன், தன் உள்ளத்தில் பொறாமைக் குணம் இல்லாமல் வாழும் நெறியைக் கொள்கையாகக் கொள்ளல் வேண்டும்.
Prof. E. MUTHUKRISHNAN
THIRUKKURAL - 161/1330
VIRTUE: DOMESTIC VIRTUE
Chapter :17.Not Envying
Transliteration:
Ozhukkaaraak Kolka, OruvanThan Nenjaththu,
Azhukkaaru Ilaatha Eyalbu. (161)
Translation:
As ‘strict decorum’s’ laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Commentary:
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

0 comments:
கருத்துரையிடுக