வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு விருது உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வழங்கினார்

இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வழங்கினார்.

விருது வழங்கும் விழா

சென்னையில் உள்ள அறிவியல் நகரம், அண்ணாபல்கலைக்கழகம்
சார்பில் அறிவியல் துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ராணிமேரி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அறிவியல் நகர துணைத்தலைவர் உ.சகாயம் வரவேற்றார். உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.


தமிழ்நாடு வாழ்நாள் மகளிர் அறிவியல் சாதனையாளர் விருது எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை முன்னாள் இயக்குனர் டாக்டர் டி.ராதாபாய் பிரபு பெற்றார்.

பெண் விஞ்ஞானிகள்

இளம் பெண் விஞ்ஞானிகள் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1. பேராசிரியர் வி.எம்.பெர்லின் கிரேஸ், உயிரி தொழில்நுட்பத்துறை, காருண்யா பல்கலைக்கழகம், கோவை. (வாழ்க்கை அறிவியல்)

2. டாக்டர் எஸ்.ஷர்லி, பேராசிரியர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

3. ஜி.வினிதா, உதவிபேராசிரியர், இயற்பியல் பிரிவு, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சென்னை. (இயற்பியல் அறிவியல்)

4. கே.சத்ய பாமா, உதவி பேராசிரியர், வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை. (வேளாண்மை அறிவியல்)

4. பி.லதா, உதவி பேராசியர், வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை. (வேளாண்மை அறிவியல்)

மேலும் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் அறிவியல் விருது கொடுக்கப்பட்டன.

துணைவேந்தர் மு.ராஜாராம்

விழாவில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திலகர், கல்லூரி கல்வி இயக்குனர் எம்.தேவதாஸ், அறிவியல் விழா தலைவர் எஸ்.முத்துக்குமரன் உள்பட பலர் பேசினார்கள்.

முடிவில் அறிவியல் குழு தலைவர் பேராசிரியர் அறிவொளி நன்றி கூறினார்.

விழாவை யொட்டி அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்று இருந்தன. நெருப்புக்கோழி, மூலிகைகள், தானியங்கள், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட அரங்குகளை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சி மார்ச் 1-ந்தேதி வரை நடக்கிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்