வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

TNPSC : அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'

அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறைகேடுகள் மற்றும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, அவ்வப்போது தேர்வாணைய கமிட்டி கூடி, புதிய முடிவுகளை மேற்கொள்ளும். இதன்படி, தேர்வாணை யத் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்ரமணியன் தலைமையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த இக்கூட்டத்தில், புதிய தேர்வுகள் அறிவிப்பு, தேர்வு முறைகளில் மாற்றம், விடைத்தாள் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை, இடஒதுக்கீட்டை முறைப்படி பின்பற்றுதல், தேர்வு நடத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள்: = டி.என்.பி.எஸ்.சி., தேர்வு களின் வெளிப்படைத்தன்மை. = பணி நியமனங்களில், முறைகேடுகள் இல்லா நிலையை அடைவது எப்படி? = சிபாரிசுகள், இடைத்தரகர்களின் செயல்பாடு கள், அரசியல்வாதி களின் பரிந்துரை போன்றவற்றை தவிர்ப்பது எப்படி? = காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய தேர்வு களை நடத்துதல், குரூப் - 2, 4 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுதல்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்