சனி, 14 மார்ச், 2015

1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்


மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.
இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


* கிராம பகுதிகளில் துவங்கப்பட்ட, 1,000 பள்ளிகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மேலும், 1,000 பள்ளிகள் துவங்கப்படும்.


* 10ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது; இதனால், 54.54 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.


* ஆரம்பம் மற்றும் மத்திய கல்விக்காக, 16,204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


* உயர்கல்வி திட்டங்களுக்காக, 3,896 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்