வெள்ளி, 13 மார்ச், 2015

கணித திறனை வெளிப்படுத்தும் 13 வயது தேனி மாணவர்


தேனியை சேர்ந்த பள்ளி மாணவன் தட்சணகுமார் தனது கணித திறனை வெளிப்படுத்தி மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்றுவருகிறார். தற்போது எட்டு இலக்க எண்களுக்கு கணித தீர்வு காணும் இவர், விரைவில் 13 இலக்க எண்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் டி.தட்சணகுமார்,13. இவர், இரண்டு எட்டு இலக்க எண்களுக்கான பெருக்கல் விடையை உடனடியாக பதிலளிக்கிறார். 2100 ம் ஆண்டிற்குள் எந்த தேதியை சொன்னாலும் அதற்குரிய கிழமையை சொல்கிறார். இரண்டு இலக்க எண்களை மூன்று முறை பெருக்குவதில் கிடைக்கும் விடையை கூறி, அதன் மூல பெருக்கல் எண்ணை கேட்டால் உடனே பதிலளிக்கிறார். இதேபோல் பல்வேறு கணித திறன்களுக்கு உடனடியாக பதிலளிக்கிறார். பள்ளி, கல்லுாரிகளில் நடந்த போட்டிகளில் பதக்கங்கள், சான்றுகளை பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவியல் போட்டி நடந்தது. பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தட்சணகுமார் கணிததிறனுக்கான போட்டியில் கல்லுாரி மாணவர்களை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றார்.

மாணவர் டி.தட்சணகுமார் கூறியதாவது: சிறு வயது முதல் என் தாத்தா எனக்கு கணித திறனை கற்றுத்தந்தார். என் சொந்த பார்முலாவை உருவாக்கி வேகமாக கணக்கு போட பழகி வருகிறேன். தற்போது எட்டு இலக்க எண்களுக்கு கணித தீர்வு காணும் நான், விரைவில் 13 இலக்க எண்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கணிதமேதை ராமானுஜத்தின் தீர்க்க முடியாத கணக்கு பார்முலாக்களுக்கு தீர்வு காண்பதே என் லட்சியம், என்றார்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்