வியாழன், 12 மார்ச், 2015

வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி,
பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்