வெள்ளி, 13 மார்ச், 2015

குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில், 16 இடங்களில் நாளை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:

குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில், 16 இடங்களில் நாளை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:     சென்னையில் 16 இடங்களில் நாளை நடக்கவுள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டையில் மாற்றம் செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

குடும்ப அட்டை திருத்தம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் இந்த மாதம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
குறைகள் தெரிவிக்கலாம்
அப்பகுதியை சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 16 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இடங்கள் விவரம் வருமாறு:-

கொளத்தூர்

* சென்னை ஏழுகிணறு பிடாரியார் கோவில் தெருவில் உள்ள சிதம்பரனார் ஸ்ரீ சாரதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கபள்ளி (கோழி மார்க்கெட் அருகில்) .

* ராயபுரத்தில் உள்ள சென்னை உருது மகளிர் தொடக்கப்பள்ளி (கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம்).

* பெரம்பூர் கபிலர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.

* சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (பெருமாள் கோவில் எதிரில்).

* கோலடியில் உள்ள அம்பத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி (பெட்ரோல் பங்க் பின்புறம்).

* கொளத்தூர் பாபாநகர் 12-வது தெருவில் உள்ள குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

* திருவொற்றியூரில் உள்ள சர்.ஏ. இராமசாமி முதலியார் சமுதாயகூடம்.

* ஆவடி முக்தா புதுப்பேட்டையில் உள்ள ஆவடி நகராட்சி நடுநிலைப்பள்ளி.

* மேற்கு மாம்பல, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி (மேட்லி சுரங்கப்பாதை அருகில்).

* ஆர்.ஏ.புரம் சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி (மந்தைவெளி ரெயில் நிலையம் அருகில்).

திருவல்லிக்கேணி

* கீழ்க்கட்டளை பெரிய தெருவில் பரங்கிமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (உழவர் சந்தை அருகில்).

* தாம்பரம் சமுதாய நலக்கூடம் (வேங்கைவாசல் பேருந்து நிலையம் அருகில்).

* சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள திறந்த வெளி மைதானம் (தாடண்டர் நகர் சமுதாய நலக்கூடம் அருகில்).

* ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலையில் செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் பள்ளி (ஓட்டல் அடையாறு கேட் அருகில்)

* திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி (கஸ்தூரிபாய் மகளிர் தாய்சேய் மருத்துவமனை அருகில்).

* கந்தன்சாவடியில் உள்ள ஆதிபராசக்தி கல்யாண மண்டபம் (காளி அம்மன் கோவில் அருகில்).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்