செவ்வாய், 31 மார்ச், 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தீர்ப்பு எழுத தினமும் 18 மணி நேரம் உழைக்கும் நீதிபதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று கவனித்து கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, 41 நாட்களில் விசாரித்து முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
தற்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 9 பீரோக்களில் இருந்த 67 ஆயிரம் பக்க ஆவணங்களையும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட 2.15 லட்சம் பக்க ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பை நிதானமாக எழுதி வரும் குமாரசாமி, அதற்காக தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்