மத்திய அரசுத் துறைகளில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் பிரிவு பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1877 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் அதிகாரி பணியிடங்களை, இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்களை நியமனம் செய்து வருகிறது. தற்போது மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் சார்ந்த அரசு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
'காம்பைன்ட் மெடிக்கல் சர்வீசஸ் எக்ஸாமினேசன்-2015' எனும் தேர்வு மூலம் மருத்துவம் சார்ந்த 1402 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ரெயில்வே துறையில் அசிஸ்டன்ட் டிவிசினல் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 600 இடங்களும், இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் மருத்துவ சேவைப் பிரிவில் அசிஸ்டன்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 39 இடங்களும், மத்திய ஆரோக்கிய சேவைப் பிரிவில் ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் பணிக்கு 391 பணியிடங்களும், கிழக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் மருத்துவ அதிகாரி கிரேடு-2 பணிக்கு 372 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-1-2015 தேதியில், 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1983 தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் எம்.பி. பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறுதியாண்டு கடைசி பருவத் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, நேர்காணல், ஆளுமைத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர் களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பார்ட்-1, பார்ட்-2 என்ற முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான இடங்களில் புகைப்படம், கையப்பம் மற்றும் சான்றிதழ் நகல்கள் 'அப்லோடு' செய்யப்பட வேண்டும். எனவே இவற்றை முன்கூட்டியே குறிப்பிட்ட அளவில் ஸ்கேன் செய்து கொள்வது அவசியம்.
முக்கிய தேதிகள்:
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 10-4-15
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 28-6-15

0 comments:
கருத்துரையிடுக