ஆசிரியர் சொந்தங்களே கலைஞர் தொலைக்காட்சியில், அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு அதன் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியானதா என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழக மாநிலதலைவர் செல்லத்துரை அவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி அவர்கள் , பல்வேறு ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு விவாதம் நடத்தினார்கள்..
இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு 22.03.2015 அன்று பிற்பகல் 1மணி அளவில் நெஞ்சுப்பொறுக்குதில்லையே பகுதியில் ஒளிப்பரப்பாகின்றன....
இதில் மாநில தலைவர் செல்லத்துரை அவர்கள் இன்றைய ஆசிரியர்களின் நிலை, வேலைவாய்ப்பு, காலிப்பணியிடம், ஆசிரியர்களின் எதிர்கால நிலை, ஆசிரியர்களின் மனக்குமுறல் குறித்து புள்ளிவிவரத்தோடு எடுத்துரைக்கிறார் காணத்தவறாதீர்கள்....
இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ..
0 comments:
கருத்துரையிடுக