ரூ. 260 கோடியில் சர்வதேச தரத்தில் பொறியியல் ஆய்வகம்
கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் சென்னை எம்.ஐ.டி.,யில், தமிழக அரசின் பங்களிப்புடன் தலா, 260 கோடி ரூபாயில் சர்வதேச தரம் வாய்ந்த பொறியியல் ஆய்வகம் நிறுவ, ஜெர்மனி தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், 520 மற்றும், 170க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் செயல்பட்டுவருகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பாடத்திட்டத்தை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மாற்றியமைத்து வருகிறது. இத்துடன், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், கல்லுாரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி (ஜி.பி.டி.,), சென்னை எம்.ஐ.டி.,யில், தலா, ௨௬௦ கோடி ரூபாயில் சர்வதேச தரத்திலான பொறியியல் ஆய்வகம் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ஜி.பி.டி., முதல்வர் வைரம் கூறியதாவது: இன்ஜி., பாலிடெக்னிக் மாணவர்கள் சர்வதேச தர ஆய்வகத்தை பயன்படுத்தும் விதமாக, ஜெர்மனியின் 'சீமன்ஸ்' நிறுவனம் ஆய்வகம் அமைக்க முடிவுசெய்துள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் கோவை ஜி.பி.டி., மற்றும் எம்.ஐ.டி.,யில், தலா, 260 கோடி ரூபாயில் ஆய்வகம் நிறுவப்படவுள்ளது. குஜராத்தில் இந்நிறுவனம், ஐந்து இடங்களில் அமைத்துள்ள ஆய்வகங்களை, தமிழக உயர் கல்வித் துறை செயலர், தொழில்நுட்ப கல்வி கமிஷனர், அண்ணா பல்கலை பேராசிரியர் மற்றும் நான் உட்பட, எட்டு பேர் அடங்கிய குழு சமீபத்தில் ஆய்வுசெய்தோம்; திருப்தியாகவும் இருந்தது.
தமிழக அரசு இரு கல்லுாரிகளுக்கும் ஆய்வகம் நிறுவ தலா, ௨௬ கோடி ரூபாய் ஒதுக்குகிறது; மீதமுள்ள தொகையை, மத்திய அரசின் ஒப்புதலுடன் தனியார் நிறுவனமே செலவு செய்யவுள்ளது. இது, மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.எங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாகவும், பிறருக்கு கட்டண அடிப்படையிலும், மிகை பாடமாக பயிற்றுவிக்கப்படும். தொழில் துறையினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, வைரம் கூறினார்

0 comments:
கருத்துரையிடுக