வியாழன், 26 மார்ச், 2015

ஆஸ்திரேலியா 313 குவித்தால் இந்திய அணி 225 ல் ஆல்அவுட் -புக்கிகள் கணிப்பு-

ஆஸ்திரேலியா 313 குவித்தால் இந்திய அணி 225 ல் ஆல்அவுட் -புக்கிகள் கணிப்பு- ஆஸ்திரேலியா 313 குவித்தால் இந்திய அணி 225 ல் ஆல்அவுட் -புக்கிகள் கணிப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளித்து அபாரமாக ரன்களை குவித்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணிதான் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று கோடிக்கணக்கானோர் பந்தயம் கட்டி வருகின்றனர். சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் சுழற்பந்துக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்கமாட்டார்கள் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் வேகப்பந்தை எப்படிசமாளித்தார்களோ அதேபோலவே சுழற்பந்தையும் மிக நிதானமாக ஸ்மித், ஃபின்ச் ஜோடி இந்திய சுழற்பந்தையும் சமாளித்து வருகிறது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 320 ரன்களுக்கு மேல் குவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 313 ரன் எடுத்தால் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடும் என்று புக்கிகள் கணித்துள்ளனர். அதேவேளையில் இந்தியா முதலில் பேட் செய்திருந்தாலும் 275 ரன்கள்தான் எடுத்திருக்கும் என்பதும் ஒரு கணிப்பு. டெல்லியை பொறுத்த வரை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஒரு ரூபாய்க்கு 42 பைசாதான் கூடுதலாக கிடைக்கும். அதே வேளையில் இந்தியா வெற்றி பெற்றால் ஒரு ரூபாய்க்கு 3.25 பைசா கிடைக்கும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்